பிளஸ் 2 பொதுத் தேர்வை இணையம் மூலம் நடத்தலாம்: ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்

சென்னை,ஏப்.17- தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலை வர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, கரோனா 2ஆவது அலை தீவிரமடைந்து, தொற்று பாதித்துள்ள நாடுகளில் உலகிலேயே 2-ஆவது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசுபல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மக்களின் கவனக்குறை வால் கரோனா பிடியில் சிக்கித் தடுமாறுகிறோம்.

கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதுடன் 12-ஆம்  வகுப்பு தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வு நடத்துவதுதான் சிறந்ததாக இருக்கும். பிளஸ் 2 தேர்வு மதிப்பெண், மேற்படிப்புக்கு அவசியம் என்பதால் அதை ரத்து செய்துவிட முடியாது.

அதேநேரம் தொடர்ந்து தள்ளி வைத்துக் கொண்டிருக்கவும் இய லாது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாண வர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

 

Comments