பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுரை, ஏப்.15  ’தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் அச் சங்க மாநில தலைவர் கே.பி.., சுரேஷ் கூறியதாவது:நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தும், மே 4இல் துவங்க இருந்த பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமலும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.அதைத் தொடர்ந்து தமிழ கத்திலும் மே 4 முதல் நடக்கவுள்ள பிளஸ் 2 பொதுதேர்வை ரத்து செய்ய வேண்டும். இத்தேர்வை எட்டு லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர் பணியில் ஈடு படுத்தப்படுவர். மாணவர், ஆசிரியர் நலன் மற்றும் கரோனா தொற்று தீவிரத்தை உணர்ந்து பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

 

வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி சிறப்புக் கடன் 

சென்னை, ஏப்.15 வீட்டுவசதி நிறுவனங்களுக்கு சிறப்புக் கடன் வழங்குவதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுதும், 2020இல் கட்டுமான திட்டங்கள் முடங்கின. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், மக்கள் வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதில் பாதியில் முடங்கும் திட்டங்களை செயல்படுத்தவும், மக்களுக்கு வீட்டுக்கடன் தடையின்றி கிடைக்கவும், மத்திய அரசு சிறப்பு நிவாரணங்களை அறிவித்தது. இதன்படி, வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்புக் கடன் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு கடனை, பல்வேறு வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் முறையாக திருப்பிச் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து உள்ளது.இதை கருத்தில் வைத்து, சிறப்புக் கடன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை பயன்படுத்தி, தேசிய வீட்டுவசதி வங்கி, வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு, சிறப்பு கடன்களை வழங்கும். இதை பெற, வீட்டுவசதி நிதி நிறுவனங் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு : விசாரணை குழுவிடம் முறையிட உத்தரவு 

மதுரை, ஏப்.15 கணினி பயிற்றுநர் தேர்வு முறைகேடு குறித்து இரு நபர் விசாரணைக்குழுவிடம் மனு செய்து நிவாரணம் தேடலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கணினி பயிற்றுநர்கள் (முதுநிலை ஆசிரியர் நிலை) நியமனத்திற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019இல் அறிவித்தது. செல்வம் என்பவர், ‘தேர்வு நடைமுறைகளில் சில தவறுகள் நடந்தன. தேர்வு அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்என உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார். சில கேள்விகளுக்கு தவறானகீபதில்கள் இடம் பெற்றதால் அதற்குரிய மதிப்பெண் வழங்கி தற்காலிக தேர்வானோர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற உத்தரவிடக்கோரி சில மனுக்கள் தாக்கலாகின.

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு: இதுபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின. அந்நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட் டுள்ளது. அக்குழு சென்னை நுங்கம்பாக்கம் கல்லுரி சாலை டி.பி.அய்., வளாகம் .வி.கே.சம்பத் மாளிகையில் விசாரிப்பதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. முறைகேடுகள், தவறுகள், வினாத் தாள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டதன் செல்லுபடி தன்மை, ‘கீபதில்களில் தவறுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த குறைபாடுகள் குறித்து அக்குழுவை மனுதாரர்கள் அணுகி மனு செய்து நிவாரணம் தேடலாம் என்றார்.

 

 

 

 

Comments