ஏட்டுத் திக்குகளிலிருந்து...

28.04.2021

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

· கரோனா தடுப்பூசிக்கு வெவ்வேறு விலைகள் நிர்ணயிக்கப்படுவதற்கான காரணம், நியாயம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு.

· ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு தேசிய பிரச்சினை. இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக் குடி வேதாந்தா ஸ்டிரலைட் ஆலைக்கு ஆக்சிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.

 தி டெலிகிராப்:

· தொற்றுநோயின் தன்மையைப் புரிந்து கொண்டு  எதிர்காலத்தைத் திட்டமிடு வதிலும், இதை விட மோசமாக, ஒரு நெருக் கடி காலத்தில் தலைமையேற்று அரசை நடத்து வதில், மோடி அரசு முற்றிலும்  தோல்வியுற்றது என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

· இதை எளிமையாகக் கூறுவது சிறந்தது: நரேந்திர மோடி பதவியை விட்டு செல்ல வேண் டும். அமித் ஷாவும் செல்ல வேண்டும். அஜய் மோகன் பிஷ்ட் அல்லது யோகி ஆதித்யநாத் செல்ல வேண்டும். ஒருமைப்பாடு இல்லாத திறமையற்றவர்கள் திரு மோடி அவரது அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டியது அவசியம். நமது பிழைப்புக்கு தேவையான மீட்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவற்றின் மகத்தான செயல் பாட்டை நாடு தொடங்குவதற்கு, இவர்கள் அதிகார பதவிகளில் இருந்து வெளியேறுவது உடனடியாக நடக்க வேண்டும் - நாளை என்பது தாமதம். நேற்று நடந்திருந்தால் சிறப்பு என கட்டுரையாளர் ருசித் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

· பல மாநிலங்கள் தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை குறைத்து அறிக்கை வெளியிடுகின்றன என்ற கேள்விக்கு, கோவிட் -19 இல் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் எந்த பயனும் இல்லை, ஏனெனில் அது இறந்தவர் களை மீண்டும் கொண்டு வராது என அரி யானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

· கரோனா சிகிச்சைக்கும் போதுமான ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லாமல் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராட நாடு முயற்சிக் கையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் தலைமை உத்தி என்பது அனை வரையும் மவுனப்படுத்துவது. மோடி அரசு எப்போதுமே இந்த கொள்கையை நேசிக்கிறது என தலையங்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

· என்.டி.டி.வி நடத்திய ஒரு புலனாய்வில் டில்லியில் கடந்த வாரம் வரை அரசு அளித்த புள்ளி விவரங்களைவிட 1,150 பேர் அதிகமாக இறந்திருப்பதாகத் தெரியவந்தது. நாட்டின் வேறு பகுதிகளிள் நடத்தப்பட்ட புலனாய்வுகளிலும் இதுபோன்று எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது..வாகன நிறுத்துமிடங்கள், பூங்காங்கள், காலி மைதா னங்கள் போன்றவற்றில் தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டில்லியின் சராய் காலே கான் சுடுகாட்டில் 27 புதிய தகன மேடைகள் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள பூங்காவில் மேலும் 80 தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

- குடந்தை கருணா

Comments