தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு

 பொருளாதார சுமை அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை

சென்னை,ஏப்.4 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத் தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த செப் டம்பர் 1ஆம் தேதி 22 சுங்கச்சாவடி களில் கட்ட ணம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் 1.4.2021 முதல் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. அதன்படி, கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள் ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர்(செங்கல்பட்டு), ஆத்தூர் (திண்டிவனம்), கிருஷ்ணகிரி, சாலை புதூர் (தூத்துக்குடி), பள்ளி கொண்டா (வேலூர்), வாணியம் பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (விருதுநகர்), கப்பலூர் (மதுரை), நாங்குநேரி (நெல்லை), புதுக் கோட்டை, சிட்டம்பட்டி(திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக் குடி(சிவ கங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), சிறீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்), கிருஷ்ணகிரி, நல்லூர் (சென்னை) மேட்டுப்பட்டி (உளுந் தூர்பேட்டை)  உட்பட 26 சுங்க சாவடிகளில் 5 முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது தான் மீண்டு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் சுங்க கட்டண உயர்வு அவர்களுக்கு மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்று கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். அதே நேரத்தில் சுங்கக் கட்டணம் அதிகரித்தால் லாரி வாடகை அதிகரித்து அத்தியா வசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘சுங்கச்சாவடி களில் ஒவ்வொரு ஆண்டும் கட்ட ணம் தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகின்றனர்.

இதுவரை 234 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகமாகும் போது சுங்கச்சாவடி களில் கட்டணம் குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆனால், எதையும் அவர்கள் செய்யவில்லை. சுங்கச்சாவடி மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடக் கிறது. மதுரவாயல் சுங்கச்சாவடி சாலைகளில் மின்விளக்கே கிடை யாது. காலவாதியாகி 10 வருடங்கள் ஆகி விட்டது. அந்த சுங்கச்சாவடி களில் இந்த கட்டணம் வசூலிக்கப் படுகிறது. நாட்டிலேயே தேசிய நெடுஞ்சாலையில் தான் 53 சதவீதம் விபத்து நடக்கிறது. இதில், தமிழகத் தில் தான் அதிகப்படியான விபத்து நடக்கிறது. அவ்வாறு பராமரிப் பின்றி கிடக்கும் இந்த சாலைகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக் கொண்டே இருப்பது கண்டிக்கத்தக்கதுஎன் றார்.

சுங்கச்சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளும் நடைபெறாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருவது வருத்தம்அளிப்பதாகவும்

வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comments