கருணை அடிப்படையில் வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் தாய்க்கு வழங்க உத்தரவு

 சென்னை, ஏப்.3 கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதி யத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்து தாய்க்கு வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் திருமலை, தலைமை ஆசிரியராக பணி யில் இருந்தபோது இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள் ளனர். அவர்களில் ஒரு மகன் தேசிங்குராஜாவுக்கு, கருணை அடிப்படையில் வாரிசு வேலையாக, தேவனூர் அரசு பள்ளியில் எழுத்தர் பணி வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தன் மகன் தேசிங்குராஜா மீது துறை

ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை  உயர்நீதி மன்றத்தில் வள்ளி யம்மாள்வழக்குத் தொடர்ந் தார். அதில், கருணை அடிப் படையில் வேலை பெறும் போது, குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதாக தேசிங்கு ராஜா உத்தர வாதம் அளித்தார்.

அதனால் அனைவரும் அவருக்கு வேலை வழங்க ஆட்சேபனை இல்லை என்று கையெழுத்திட்டோம். ஆனால் வேலை கிடைத்ததும், குடும்பத்தைப் பார்க்கவில்லை. அவதூறாக பேசி என்னை அடித்துத் துன்புறுத்துகிறான். இதுகுறித்து காவல்துறையினர், கடந்த ஆண்டு அவன் மீது வழக்குப்பதிவு செய்துள் ளனர். எனவே, துறைரீதியான விசாரணை நடத்தி அவனை பணியிடை நீக்கம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மூத்த சகோதரிக்கு அனைத்து தகுதி இருந்தும், இந்த வாரிசு வேலையை தேசிங்கு ராஜாவுக்கு விட்டுக் கொடுத் துள்ளனர். மனுதாரர் தன் மகனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அதையெல்லாம் அரசு உயர் அதிகாரிகள் முழு மையாக விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும். இருந்தாலும், வாரிசு வேலை பெற்ற மகன் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பெற மனுதாரருக்கு உரிமை உள் ளது. எனவே, தேசிங்குராஜா வின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை பிடித்தம் செய்து மனுதாரருக்குவழங்க வேண்டும். இந்த வழக்கை வருகிற ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

அதற்குள் உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், தேசிங்கு ராஜாவும் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Comments