சத்தீஷ்கரில் 24 வீரர்கள் பலியானதற்கு மோசமாக வியூகம் வகுத்ததே காரணம்

ராகுல்காந்தி கருத்து

புதுடில்லி, ஏப்.6 சத்தீஷ்கரில் துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியானதற்கு மோசமாக வியூகம் வகுத்ததே காரணம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ஆம் தேதி பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 24 பாதுகாப்பு படையினர் பலியானார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று (5.4.2021) தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சி.ஆர்.பி.எப். டி.ஜி.பி. குல்தீப் சிங் கூறியதை அவர் மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி எதுவும் இல்லை என்றும், பாதுகாப்பு படையினருக்கு சம மான எண்ணிக்கையில் நக்சலைட் டுகளும் பலியாகி இருப்பதாக குல்தீப் சிங் கூறியிருந்தார்.

அதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

உளவுத்துறை தோல்வி இல்லை என்றால், சம எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட என்ன காரணம்? இது, மோசமாக வகுக்கப்பட்டு, திறமையின்றி நிறைவேற்றப்பட்ட வியூகம் என்பதுதான் காரணம்.

வேண்டுமென்றே பலி கொடுப்பதற்கு நமது வீரர்கள், பலியாடுகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image