உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்-ஏப்ரல் 23

உலக புத்தக நாளில் நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

நான் அண்மைக் காலத்தில் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் வால்டர் அய்சக் சன் எழுதியதெ கோட் பிரேக்கர்’. கடந்த 2020 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெனிபர் டவுட்னா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் மரபணு திருத்துதல் (Gene Editing) தொழில் நுட்பத்தை பற்றிய விரிவான புத்தகம்.

இந்தப் புத்தகம் பல கோணங்களில் நம்மை ஈர்க்கிறது. ஒரு பெண் விஞ்ஞானி யின் இயற்கையைப் புரிந்துகொள்ளும் தேடுதல். மிகவும் சிக்கலான தொழில் நுட்பம். தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கும் இயற்கை. அதன் பின் பல விஞ்ஞானிகளின் மிகப் பெரும் கனவுகளையும், அவர்களின் அய ராத உழைப்பையும் கச்சிதமாக தொகுத்து எழுதப்பட்ட புத்தகம்.

சனாதனவாதிகள் ஜாதியமைப்பை கட்டிக் காப்பாற்றிட பரம்பரை பரம்பரை யாக குலத்தொழிலை புகுத்தினார்கள். ஆனால், திராவிட இயக்கம் வருகைக்கு பின் அறிவியல் அறிவை மக்களிடம் புகுத்த வேண்டிய  அடிப்படையில் வந்த பகுத் தறிவை எதிர்க்க முடியாமல் ஓடிப்போன சனாதனவாதிகள் பின்னால்நம் முன் னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை" எனும் பெயரில் மரபணு அறிவியலை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

மரபணு அறிவியலின் முன்னோடி விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சன் கூட பல மரபணு ஆராய்ச்சிகனை முன் வைத்து வெள்ளை இன ஆதிக்கத்தை ஆதரித்துப் பேசினார். சனாதனவாதிகளோ, பரம்பரை யாக வரும் மரபணுவில் அறிவு ஒளிந்து கொண்டிருக்கிறது அதனால் பரம்பரை சரி, குலத்தொழில் சரி, கர்மா அறிவியல் என்று தங்கள் விஷப் பரப்புரையைத் தொடர்ந் தார்கள். ஆனால் ஜெனிபர் டவுட்னா மற்றும் கார்பந்தியர் எனும் இரண்டு பெண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு கிரிஸ்பர் (CRISPER) எனும் தொழில்நுட்ப உதவியு டன் நீங்கள் மரபணுக்களைத் திருத்தி விடலாம்.

மரபணுவில் மர்மங்கள் இல்லை, அது நிரந்தரமானதும் இல்லை. அதை அறிவிய லால் ஒரு சாதாரண காகிதத்தை போல் கத்தரித்து அதன் சிதைவுகளைத் திருத்தி விடலாம் என்பதை மெய்ப்பித்து காட் டினார்கள்.

இதனால் பல மரபணு வியாதிகளை மிக எளிதாகத் தீர்த்துவிடலாம். மனிதனுக்கு அறைகூவல் விடுக்கும் நோய்கள் கலைந்து விடும்.  ஏன் இப்போது பரபரப்பாகப் பேசப் படும் கரோனா தடுப்பூசிகள் இவ்வளவு வேகமாக கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது இந்தத் தொழில்நுட்பம் தான். வருங்காலத்தில் கரோனா மாதிரியான மிக மோசமான வைரசுகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு இந்த தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும்.

நிற்க; இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு மிக எளிதாகக் கிடைக்க ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை கடிவாளம் போட்டு கட்டுப்படுத்தவும் தேவை இருக் கிறது. சீனாவில் ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது தந்தைக்கு எய்ட்ஸ் என தெரியவர ஹென்குன் எனும் விஞ்ஞானி, அந்தக் கர்ப்பிணிப் பெண் கருப்பையுள் இருக்கும் சிசுவிற்கு மரபணு திருத்தம் செய்துவிட்டார். குழந்தை நலமாக எய்ட்ஸ் நோய் இல்லாமல் பிறந்தது (பிறந்தார்கள் இரட்டையர்).

இது தான் சிக்கல், நோயை குணப் படுத்தும் இந்தத் தொழில்நுட்பத்தை, குறிப் பிட்ட குழந்தைகளை 'டிசைன்' செய்யப் பயன்படுத்தினால்? இது தவறான மனிதர் களிடம் சிக்கிவிட்டால்?...

ஜெனிபர் டவுட்னாவும், பிற கிறிஸ்பர் விஞ்ஞானிகளும் இந்தத் தொழில்நுட் பத்தை சரியான முறையில் பயன்படுத்தத் தேவையான கொள்கை , சட்டங்களுக்காக இப்போது போராடி வருகிறார்கள். அறி வியல் என்பது இயற்கையை அழிப்பதல்ல. மாறாக, இயற்கையை இன்னும் புரிந்து கொள்வது என்று இந்த புத்தகம் முடிகிறது. 

புத்தகம் பற்றிய தகவல்..

https://www.amazon.com/Code-Breaker-Jennifer-Doudna-Editing/dp/1982115858

Comments