ஏட்டுத் திக்குகளிலிருந்து...

22.04.2021

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

· கேரள மாநிலத்தில் கரோனா தடுப்பூசி அனைவர்க்கும் இலவசமாக அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் மின்னியா போலிஸ் மாகாணத்தில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதற்குக் காரணமான காவல் அதிகாரி டெரக்சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்

துள்ளது.

டெக்கான் கிரானிகல்:

· கொரானா இரண்டாவது அலை பரவுவதற்கு பிரதமர் மோடிதான் காரணம். அதற்கு  பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அமெரிக்க காங்கிரஸால் அமைக்கப்பட்ட பகுதிசார் நீதித்துறை அமைப்பு அதிபர் பிடென் தலைமையிலான நிர்வாகத்திடம் இந்தியா உட்பட நான்கு நாடுகளைகவலைக் குரிய நாடுகளாகஅறிவிக்குமாறு கேட்டுக் கொண்டது, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான மத சுதந்திர நிலைமைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளன.

தி டெலிகிராப்:

· லக்னோவில் உள்ள பல தனியார் கோவிட் மருத்துவ மனைகள் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் .பி. அரசு, ஆக்ஸிஜனை வழங்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வேறு இடங்களுக்கு செல்லுமாறு குடும்பங்களை கேட்டுக்கொண்டன. செயலற்ற ஒரு அரசு உபியில் உள்ளதாக நோயாளிகளின் குடும்பத்தினர் புலம்புகின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· பாரதீய கிஷான் சங்கம் அழைப்பின்பேரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாபில் இருந்து டில்லியின் எல்லைகளை நோக்கி பங்கேற்கச் சென்றனர்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

· கரோனா வைரஸ் உச்சத்தை தொட்டு கடுமையான தாக்கத்தை நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தி வரும் வேளையில், ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களை காக்க பிச்சை எடுத்தோ திருடியோ, எதையாவது செய்தோ உயிர்களை காப்பாற்றுங்கள் என்று உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது டில்லி உயர் நீதிமன்றம்.

· பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

· கரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 என மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கரோனா வைரஸ் தடுப்பூசி கொள்கைப்படி புதிய விலைகளை அறிவித்துள்ளது கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா.

- குடந்தை கருணா 

Comments