பெரியபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு

திருவள்ளூர்,ஏப்.9- திருவள்ளூர் மாவட் டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரிய பாளையம் அரசினர் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை அருகே உள்ள மைதானத்தில் 7.4.2021 அன்று இளை ஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப் போது ஏதோ ஒரு பொருள் அவர்களது கிரிக்கெட் மட் டையில் தட்டுப்பட்டது. இதனால் அந்த இடத்தில் அவர்கள் மண்ணைத் தோண்டி பார்த்தபோது முக்கால் அடி நீளம், கால் அடி அகலம், இரண்டரை கிலோ எடை கொண்ட ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத் தனர்.

இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாரதி, பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் தரணீஸ்வரி, காவல்துறை உதவி ஆய்வாளர் நரசிம்மன் ஆகியோர் கொண்ட காவல்துறை குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

 

20 ஆண்டுகளுக்கு முந்தையது

இளைஞர்களால் கண்டெடுக்கப் பட்ட ராக்கெட் லாஞ்சரை ஆய்வு செய்தனர். அது சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது. ராக்கெட் லாஞ்சரை காவல்துறையினர் கைப்பற்றி கும்மிடிப்பூண்டியில் உள்ள பழைய இராணுவ தளவாடங்களை அழிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வைத்தனர்.

 

Comments