பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 2021

வல்லம், ஏப்.2 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின், பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 19.03.2021 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. தொழில்நுட்ப கண்காட்சியை கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர்

கி.வீரமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

இக்கண் காட்சியில் கமலா சுப்ரமணியன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் எம்.வினிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.மல்லிகா, துணை முதல்வர் டாக்டர். .ஹேமலதா,  துறைத்தலைவர்கள், பேராசியர் கள், மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

புதிய அறிவியல் சிந்தனையை உருவாக்கு வதில் மாணவர்கள் எந்த அளவிற்கு தங்களைப் பொறுப்புடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால் உருவாக்கப்பட்ட திட்ட செயல்முறை படைப்புகள் மூலம் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தனர். துறை வாரியாக மாணவர்களின் திட்ட செயல்முறை படைப்புகளை பார்வையிட்ட பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வன (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வல்லுநர் குழு சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படைப்பு களை பரிசுக்காக தேர்ந்தெடுத்தனர்.

துறைவாரியாக முதல் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் : கட்டட எழிற்கலை  துறையில் .ஷோபனா, .ஜனனி, . லக்ஷிதா, ஜச.ஜைத் தூன் ஷஹானி, .கிருத்திகா, .கார்த்தி கேயன் ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு Match Stick Model செயல்முறை படைப்பிற்காக முதல் பரிசினைப் பெற்றனர்,

மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர் பியல் துறையில் Double Collector Solar Driver for Agricultural Products  என்ற விவசாயத்திற்கான செயல்முறை படைப் பிற்காக .ஷியாம் சுந்தர், .அபினாஷ், .குணாலன், .க்ரிஷாந்த் ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு முதல் பரிசினைப் பெற்றது.

மாடர்ன் ஆபிஸ் பிராக்டீஸ்  துறையில்

.அஸ்வின்ராம், ரா.சுவாமிநாதன், .அரவிந்தன். .ராகுல், .முகமது ரியாஸ்கான், .அருண்குமார் ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு Rain Water Harvesting and Energy Saving என்ற நீர்மேலாண்மை செயல்முறை திட்டத்திற்கு முதல் பரிசினைப் பெற்றனர்.

அமைப்பியல்  துறையில் .அப்துல் ஜமீல், .சந்தோஷ், .ஆனந்த கணேஷ், எல்.பாலாஜி, .துளசிராம், .சாய் வரதராஜன் ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு Manufacturing of Brick by Using Waste Plastics and Waste Papers  என்ற (பயனற்ற பொருள்களின் பயன்பாடு) செயல்முறை திட்டத்திற்கு முதல் பரிசினைப் பெற்றனர்.

மின்னியல் மற்றும் மின்னணுவியல்   துறையில்  ,கதிரவன், .கிஷோர், எல்.லோகேஷ், .முகேஷ்குமார், .முருகேஷ், மா.முஸ்டக் அகமது  ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு Indication of Brake Failure for Four Wheelers என்ற வாகன ஓட்டிகளில் பாதுகாப்பு  திட்ட படைப்புக்காக  முதல் பரிசினைப் பெற்றனர்.

கணினித்துறையில்  . ஷா இன்பன்ட் ராஜ், .முகமது அஷிக், .பசித் கான், .சந்தோஷ் குமார், .கண்ணன், .சிவா ஆகியோரைக் கொண்ட மாணவர் குழு Circular Notification System Using Network Security  என்ற  திட்ட படைப்புக்காக  முதல் பரிசினைப் பெற்றனர்.   

இயந்திரவியல்  துறையில் .வசந்த ராஜ், .வீரமணி, .வெங்கடேசன், .விஜேந்திரன், .விக்ரம், .விஷ்னு ப்ரியன் ஆகிய மாணவர்கள் Automated Water Tank Cleaner  என்ற  திட்ட படைப்புக்காக  முதல் பரிசினைப் பெற்றனர்.

இக்கண்காட்சியில் அறிவியல் பூர்வமாக  தங்களது  திட்ட  செயல்முறை படைப்புகளை உருவாக்கிய அனைத்து மாணவ, மாணவி களை யும் இக்கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள்.

இக்கண்காட்சியினை இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் .சரவணக்குமார் மற்றும்  லா.விவேக் நிஜந்தன் அவர்களும் ஒருங்கிணைத் தார்கள்.

Comments