சென்னை, ஏப்.6 பிளஸ்-2 மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம்தேதி பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ள தால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் வீடுகளில் இருந்து இணையம் வழியாக படித்து வருகின்றனர்.
9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பிளஸ்-2 மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளானதில் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (6.4.2021) நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான அரசு பள் ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வாக்குச் சவாடி மய்யங்களாக செயல்படுகின்றன.
இதனால் வாக்குப்பதிவிற்கு 2 நாட் களுக்கு முன்பே அங்கு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வாக்குச்சாவடிகளாக செயல் படுகின்ற பள்ளிகளில் பிளஸ்-2 மாண வர்களுக்கு வகுப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
குறைவான அளவு மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் வகுப்பு நடத்து வதில் பிரச்சினை இல்லை.
ஆனால் அதிக அளவிலான மாண வர்களை கொண்ட பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த இயலாத நிலை ஏற் பட்டதால் அவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (2.4.2021) முதல் 7-ஆம் தேதி வரை பள்ளி களுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கானவர்கள் வாக்குச் சாவடிக்கு செல்வதால் நாளை 7ஆம் தேதி கிருமிநாசினி மூலம் பள்ளியை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.
தொற்று பரவல் தடுக்க சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் 7-ஆம் தேதி வரை வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
அதனால் 8-ஆம் தேதி முதல் மீண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.