கரோனா 2ஆவது அலை காரணமாக 50 சதவீத லாரிகளுக்கு வேலையில்லை

சேலம், ஏப். 12- கரோனா 2ஆவது அலை காரணமாக வட மாநில தொழிலாளர்கள் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய் கின்றனர். இதன் காரணமாக தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைந்ததால் 50 சதவீதம் லாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று லாரி உரி மையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் 30 லட்சத் திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகிறது. வட மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, தானிய வகைகள், மசாலா பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை உள்பட பல்வேறு சரக்குகள் தமிழகத் திற்கு வருகிறது. அதேபோல் தமிழ கத்தில் இருந்து மஞ்சள், ஜவ்வரிசி, கல் மாவு, கோழித்தீவனம், உரம், துணி வகைகள் உள்பட பல்வேறு சரக்குகள் வட மாநிலங்களுக்கு செல் கிறது. லாரிகள் போக்கு வரத்து மூலம் தினசரி கோடிக்கணக்கில் அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் வரு வாய் கிடைத்து வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரி மையாளர்கள் கூறியதாவது: தமிழகத் தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடுகிறது. லாரி தொழிலை நம்பி தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் 20 முதல் 30 சதவீதம் வட மாநில தெழிலாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சரக்கு ஏற்று வது, இறக்குவது, உதவியாளர்கள் மற்றும் பழுதுநீக்குபவர்களாக உள் ளனர். தற்போது கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு அச்சத்தில் வட மாநில தெழிலாளர்கள் பலர் அவரவர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இத னால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து, லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்கவில்லை.

தற்போது வட மாநிலங்களில் இருந்து உணவுப்பொருட்கள், பழங் கள் வருகிறது. அவையும் இன்னும் ஒரு மாதத்திற்கே வரும். ஆனால் தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல் மாவு, மஞ்சள் உள்பட பல பொருட் கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. 50 சதவீதம் லாரிகளுக்கு வேலை கிடைக்காமல் உள்ளது. இதனால் லாரி தொழிலை நம்பியுள்ள பல்லாயிரம் பேர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments