இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது: 1,038 பேர் பலி!

புதுடில்லி, ஏப்.15 கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,00,739 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில், கரோனாவுக்கு 1,038 பேர் பலி யாகியுள்ளனர்.

தொடர்ந்து 5ஆவது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்து பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்திய சுகா தார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,00,739 பேருக்குக் கரோனா தொற்று உறுதி யாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,24,29,564 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 14,71,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று (14.4.2021)ஒரே நாளில் 1,038 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 11,44,93,238 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட் யூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப் பூசி இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என 'டாக்டர் ரெட்டிஸ்' மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளாது.

மகாராட்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 58,952 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது 13.4.2021 அன்றையவிட சற்றே குறைவு. ஒரே நாளில் 278 பேர் பலி யாகியுள்ளனர். மகாராட்டிராவில் இதுவரை மொத்தம் 35,78,160   பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். 58,804 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

மகாராட்டிராவை அடுத்து கேரளா, கருநாடகா, தமிழ்நாடு, ஆந்திராவில் தொற்றுப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

டில்லியில், புதிதாக 17,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவே அதிகபட்ச பாதிப்பு. இதற்கிடையில் டில்லி துணைநிலை ஆளுநர் முதல்வர் கேஜ்ரிவால், சுகா தார அமைச்சர் மற்றும் சுகாதாரச் செயலர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கருநாடகாவில், கடந்த 24 மணி நேரத்தில் 11,265 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அண்மைக்கால மாகப் பெருகிவரும் கரோனா தொற் றால் ஊரடங்கு ஏதும் அமலுக்கு வராது எனக் கூறியுள்ள அம்மாநில அரசு வரும் 20ஆம் தேதி (ஏப்.20) வரை 7 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், ராஜஸ்தானில் அன்றாட பாதிப்பு 6,200 என்று பதிவாகியுள்ளது. அங்கு இன்று (15.4.2021) முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரு கிறது. கடந்த மாதம் தொற்று பாதிப்பு 2 சதவீதமாக இருந்த நிலையில், இந்த மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள் ளது. இதன் காரணமாகவே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Comments