கரோனா நெருக்கடி: பிரேசிலில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் தவிப்பு

 ரியோடிஜெனிரோ, ஏப். 14- பிரேசிலில் கரோனா நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினி யில் தவித்து வருகின்றனர்.

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண் டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், பிரேசிலில் அதிகரித்து வரும் கரோனா பரவல் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களைக் கடும் பட்டினியில் தள்ளியுள்ளது. மேலும், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பிரேசிலின் மக்கள்தொகையில் மீதமுள்ள மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை நோக்கிச் சென்று கொண்டுள்ளனர் என்று செய்தி வெளியானது.

கரோனா காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் நாட்டில் தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருவதாகவும், அடிப்படை உணவுகள் கூட விலை ஏற்றத்தைக் கண்டுள்ளன என்றும் பிரேசில் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 90% படுக்கைகள் நிரம்பிவிட்டதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித் துள்ளனர். இந்த நிலையில் பிரே சில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தொடர்ந்து சுகாதார அதிகாரி களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.

பிரேசிலில் இதுவரை 8% மக்களுக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 1.3 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.1 கோடி மக்கள் குண மடைந்த நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா தொற்று முடிவுக்கு வரநீண்ட காலம் ஆகும் - உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா, ஏப்.14 கரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்பேது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த டெட்ராஸ் அதானம், பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனை களின் அவசர சிகிச்சை பிரிவுகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புவ தாகவும், ஆனால் அது தவறு . எனினும் பொதுமக்களின் ஒத்து ழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தி யம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் உயரதி காரி மரியா வான் கெர்கேவ், தெடர்ந்து 7 வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகில் கரோனா தொற்று 9 சதவீதம்  அதிகரித்துள்ளது.  இறப்பு எண்ணிக் கையும் ஒரே வாரத்தில்   அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments