ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாசிங்டன், ஏப்.  8- அமெரிக் காவில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரு கின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வரும் 19ஆம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்களாக ஆகிவிடுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெ ரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசியதாவது:

இனி குழப்பம் விளைவிக் கும் விதிகளோ, கட்டுப்பாடு களோ கிடையாது. இதன்படி வரும் 19ஆம் தேதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனை வரும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள தகுதியா னவர்கள் ஆகின்றனர். அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.

எனது 75 நாட்கள் பதவிக் காலத்தில் 15 கோடி டோஸ் கள் வரை தடுப்பூசி போடப் பட்டு உள்ளன. இதுவரை 75 சதவீத மூத்த குடிமக்களுக்கு ஒரு டோஸ் போடப்பட்டு உள்ளது.

என்னுடைய 100ஆவது நாள் பதவிக் காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசி கள் போடப்பட்டு இருக்கும் என எதிர்நோக்கி இருக்கி றேன்.

அமெரிக்காவில் கரோனா வின் புதிய வகைகளுடன் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்று தல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண் டும் என வலியுறுத்தியுள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image