பெரியார் மணியம்மை அறிவியல் - தொழில்நுட்ப நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் கோவிட்-19 இலவச தடுப்பூசி முகாம்

வல்லம், ஏப்.4 மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி மருத்துவ இயக்குனரகத்தின் துணை இயக்குனர் திரு. ரவிந்திரன், அவர்களின் அறிவுறுத்தலின் படி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கோவிட் -19 இலவச தடுப்பூசி முகாம் பணியாளர் நலமன்றத்தின் சார்பாக 01.04.2021 அன்று நடத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர். ஜாய் மேரி ஜாக்குலின் மற்றும் வட்டரா சுகாதார மேற்பார்வையாளர் மு.சிங்கராவேலன் மேற்பார் வையில்  குழுவினர் இம்முகாமினை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்ல பணியாளாகள் 130 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி (கோவிட்சீல்ட்) பாதுகாப்பு வழிமுறைகளுடன் தடுப்பூசி போடப் பட்டது.  

Comments