ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் அறிவித்துள்ளது.

·     வயதானால் இறக்க வேண்டியதுதான் என மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் பிரேம் சிங் படேல், கரோனா தொற்று மரணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தது சர்ச்சையாகி உள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மேற்கு வங்கத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அடுத்து நடைபெற உள்ள நான்கு கட்ட மாநில தேர்தலையும் ஒரே தேதியில் நடத்திட வேண்டும் என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் கோரிக்கையை சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வி.எச்.பி. அமைப்பால் பெறப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 15000 வங்கி காசோலைகள், கொடுத்தவர்களின் கணக்கில் பணம் இல்லாததால் திருப்பித் தரப்பட்டன. கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.5000 கோடி  நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     சென்னையில் மூன்று சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் பெயர்களை  நீக்கி நெடுஞ்சாலைத்துறை வேறு பெயர் வைத்ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.. சார்பில் தலைமைச் செயலாளரிடம் நேரில்  மனு அளிக்கப் பட்டுள்ளது. மீண்டும் தலைவர்களின் பெயர் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது..

- குடந்தை கருணா

16.4.2021

Comments