17 மொழிகளில் புதியக் கல்விக் கொள்கை வெளியீடு தமிழ் மொழி புறக்கணிப்பால் சர்ச்சை

சென்னை,ஏப்.25- தேசிய புதியக் கல்விக் கொள் கையின் மாநில மொழிப் பெயர்ப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுதேசிய கல்விக் கொள்கை-2020’ வடிவமைத்தது. அதில் பள்ளிக் கல்வியில் 10+2 என்ற நடைமுறை 5+3+3+4 என்ற வடிவில் மாற்றப்படும்.

தமிழகம் உட்பட சில மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தநிலையில், மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு ஜூலை 29ஆம்தேதி புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து கரோனா பரவல் சூழல் கருதி 2021ஆம் ஆண்டுக்குள் கல்விக் கொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக் கொள்கையின் சாராம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவை மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, காஷ்மீரி, ஒடியா, அசாம், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, மணிப்புரி, டோக்ரி ஆகிய 17 மொழிகளில் கல்விக் கொள்கை மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரங்களும் மத்திய கல்வி அமைச்சகத்தின் (<www.education.gov.in/en/nep-languages-2020>) இணையதளத்தில் உள்ள நிலையில் கல்விக் கொள்கையின் தமிழ்மொழிபெயர்ப்பு வெளியிடப்படவில்லை. தொடக்கம் முதலே கல்விக் கொள்கை அமலுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகள் நிலவிவரும் சூழலில், இந்த புறக்கணிப்பு விவகாரம் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வழியாக தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், விரைவாக கல்விக் கொள்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இதற்கிடையே புதியகல்விக்கொகை வரைவு அறிக்கைவெளியாகி சுமார் 2 ஆண்டுகளாகிவிட்ட சூழலில் மிக தாமதமாக மாநில மொழிப்பெயர்ப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Comments