செரோஜா புயல் பாதிப்புக்கு 177 பேர் உயிரிழப்பு

 ஜகார்தா, ஏப். 13- இந்தோனேசியா தீவில் பருவகால புயல்களில் ஒன்றான செரோஜா புயல் கடுமையாக தாக்கி வருகிறதுகிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு கடல் பகுதியில் புயலின் பாதிப்புகளை முன்னிட்டு கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பின. புயலை தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும் வீசியதுஇதனால் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலர் உயிரிழந்தனர்அவற்றில் கிழக்கு புளோரெஸ் மாவட்டத்தில் 72 பேர் அதிக அளவாக உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, லெம்பாட்டா (47), அலோர் (28) மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.  மற்றும் மாகாண தலைநகர் குபாங் நகரில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக் களை மீட்டு வாடகை வீடுகளில் தங்க வைத்துள்ளனர்.  கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ள்ன. இந்த புயலால் மொத்தம் 177 பேர் உயிரிழந்து உள்ளனர்.  45 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.  புயலால் பாறைகள் சரிந்து நிலப்பகுதிகள் துண்டிக்கப் பட்டுள்ளன.  இதனால் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளில் சென்று நிவாரண உதவிகள் வழங்கப்படும் என மாகாண துணை ஆளுநர் ஜோசப் நயி சொய் காணொலி காட்சி வழியே செய்தியாளர் களுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை தருவோரைக் காப்பாற்றுவதா?

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஆவேசம்

வாசிங்டன்,ஏப். 13- ‘பாலியல் புகார் தரும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதிலாக தொல்லை தருவோரை காப்பாற்று வதை நிறுத்துங்கள்என கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு 500 ஊழியர்கள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

உலகிலேயே பணி செய்திட மிகவும் சவுகரியமான நிறுவனங் களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் கருதப்படுகிறது. நல்ல ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை அந்நிறுவனம் வழங்கு கிறது. ஆனாலும், பெண் ஊழியர்கள் பாலியல் பாதிப்புக்கு உள்ளா வதாக அடிக்கடி புகார் எழுவது கூகுளுக்கு அவப்பெயரை ஏற் படுத்தி வருகிறது. சமீபத்தில், கூகுள் நிறுவன முன்னாள் பெண் பொறியாளர் எமி நியட்பெல்ட்தி நியூயார்க் டைம்ஸ்பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், ‘நான் பாலியல் புகார் கொடுத்த நபருடனே என்னை நேருக்கு நேர் பங்கேற்க கூகுள் நிறுவனம் நிர்ப்பந்தித்தது. அந்த நபர் என் பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து தொடர்ந்து பணி செய்தார். எனவே, சங்கடத்தில் வேலையைவிட்டு வெளியேறி னேன்,’ என கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 500 ஊழியர்கள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்) பாலியல் தொந்தர வால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக புகாருக்கு உள்ளானவரை காப்பாற்றுகிறது. புகார் கொடுத்தவர் மீது சுமை ஏற்றப்பட்டு, அவர் வேலையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் படுகிறது. அதே சமயம் புகாருக்கு உள்ளானவருக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. பாலியல் தொந்தரவு குறித்து 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடியும் 'ஆல்பாபெட்' மாற வில்லை. தொல்லை தரும் நபர்கள் இல்லாத இடத்தில் பணிபுரிய கூகுள் ஊழியர்களுக்கு உரிமை உண்டு. கூகுள் நிறுவனம் அதற்கு முன்னுரிமை அளித்து பாதுகாக்க வேண்டும்,’ என கூறியுள்ளனர்.

Comments