தமிழ்நாடு 16 ஆம் சட்டப்பேரவைத் தேர்தல்: சராசரி வாக்குப் பதிவு 72.78% - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

தமிழ்நாடு 16 ஆம் சட்டப்பேரவைத் தேர்தல்: சராசரி வாக்குப் பதிவு 72.78%

அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33%

குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52%


சென்னை,ஏப்.7- தமிழகத்தில் 234 தொகுதி களில் நேற்று (6.4.2021) நடைபெற்ற வாக் குப்பதிவில் 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரி வித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக தரும புரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக சென்னை வில்லி வாக்கம் தொகுதியில் 55.52 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

தமிழ்நாடு கேரளா, அசாம், மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களிலும், புதுச் சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்ட மன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது.

கரோனாபரவல்தடுப்புநடவடிக்கைக் கான கட்டுப்பாடுகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடைபிடிக்கப்பட்டன. சானிடைசர், கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை சுகாதாரப் பணியாளர்கள் வழங்கி, வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தனர்.

தமிழகம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோன்று கன்னியாகுமரி மக்க ளவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக் கும் வகையில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளுடன் 88,937 வாக்குச்சாவடி மய்யங்களில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப் பட்டு, சானிடைசர் பயன்படுத்திய பிறகே வாக்களிக்க அனுமதி அளிக்கப் பட்டது. வாக்குச்சாவடி மய்யங்களில் அனைவருக்கும் கையுறை அளிக்கப் பட்டது.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளா

140 இடங்களை கொண்டுள்ள கேரள சட்டமன்றத்திற்கு தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதேபோல், அங்கு காலியாக இருந்த மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு 140 இடங்களுக்கு 957 வேட்பா ளர்கள் போட்டியிட்டனர்.

140 சட்டமன்றத் தொகுதிகளிலும், மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது. காலை முதல் வாக்காளர்கள் கரோனா கால விதிமுறைகளை பின்பற்றி முகக் கவசத்துடன் வந்து, கையுறை அணிந்து வாக்குப்பதிவு செய்தனர். கேரளாவில் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. முடிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

அசாம்

அசாமில் 3 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதி களுக்கு 3 ஆம் கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது. ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர மாநிலம் முழுதும் எவ்வித அசம்பாவிதமின்றி அமைதியாக தேர் தல் நடந்தது. மொத்தம், 82.28 சதவீத வாக்குகள் பதிவாயின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முந்தைய இரண்டு கட்டங்களைப் போலவே மூன் றாம் கட்டத் தேர்தலிலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. அங்கு மொத்தம் 77.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடந்தது- புதுவையில் 81.64 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதி கள் உள்ள தேர்தல் களத்தில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதற் காக 1,558 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

புதுச்சேரியில் சுமார் 81.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக... 

பதிவான வாக்குகளில், மாவட்ட வாரி யான வாக்கு சதவீதம் விவரம்:

திருவள்ளூர் - 70.56

சென்னை - 59.06

காஞ்சிபுரம் - 71.98

வேலூர் - 73.73

கிருஷ்ணகிரி - 77.30

தர்மபுரி - 82.35

திருவண்ணாமலை - 78.62

விழுப்புரம் - 78.56

சேலம் - 79.22

நாமக்கல் - 79.72

ஈரோடு - 77.07

நீலகிரி - 69.68

கோவை - 68.70

திண்டுக்கல் - 77.13

கரூர் - 83.92

திருச்சி - 73.79

பெரம்பலுர் - 79.09

கடலூர் - 76.50

நாகப்பட்டினம் - 75.48

திருவாரூர் - 76.53

தஞ்சாவூர் - 74.13

புதுக்கோட்டை - 76.41

சிவகங்கை - 68.94

மதுரை - 70.33

தேனி - 71.75

விருதுநகர் - 73.77

ராமநாதபுரம் - 69.60

தூத்துக்குடி - 70.20

திருநெல்வேலி - 66.65

கன்னியாகுமரி - 68.67

அரியலூர் - 82.47

திருப்பூர் - 70.12

கள்ளக்குறிச்சி - 80.14

தென்காசி - 72.63

செங்கல்பட்டு - 68.18

திருப்பத்துர் - 77.33

ராணிப்பேட்டை - 77.92

மொத்தம் - 72.78

No comments:

Post a Comment