சென்னையில் 15க்கும் மேற்பட்ட மய்யங்களில் 12 ஆயிரம் சிறப்பு கோவிட் சென்டர்

 சென்னை, ஏப். 12- சென்னை யில் 15க்கும் மேற்பட்ட மய் யங்களில் தனிமைப்படுத்தும் முகாம் 12 ஆயிரம், படுக்கை வசதிகளுடன் அமைப்பு. அத் திப்பட்டில் தனிமைப்படுத் தும் (சிறப்பு கோவிட் சென் டர்) மய்யம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கில் பல் வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டன.

இதையடுத்து டிசம்பர், ஜனவரி மாதம் வரை தொற்று எண்ணிக்கை 500க்குள் இருந் தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயி ரம் என்று இருந்த நிலையில் 6 ஆயிரத்தை நெருங்கியுள் ளது.  இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கெனவே இருந்த தனிமைப்படுத்தல் முகாம்களை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலை யில் சென்னையிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவ தால் கரோனாவை கட்டுப் படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதோ அதை கடந்த 8ஆம் தேதி முதல் மீண் டும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

வீட்டில் தனிமைப்படுத் தும் வசதி இல்லாதவர்கள் அரசுத் தரப்பில் தயார் செய் துள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப் பட்டு சோதனையின் முடிவு கள் வரும் வரை தனி மைப் படுத்தப்படுவார்கள். அதற் காக தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் தனிமைப்படுத் தும் மய்யங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை திரு வல்லிக்கேணி, விக்டோரியா மாணவர் விடுதியில் கரோனா கண்காணிப்பு மய்யம் அமைக் கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அம்பத்தூர் மண்டலம் அத் திப்பட்டில் தனிமைப்படுத் தும் மய்யம் தற்போது தயாராகி உள்ளது. இதைப் போன்று தமிழகம் முழுவதும் தனிமைப் படுத்தும் முகாம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Comments