விவசாயப் படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

 சென்னை, ஏப்.8 கருநாடக மாநிலம் குனூர் என்ற குக் கிராமத்தை சேர்ந்த வெங்க டேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முத லிடம் பிடித்து சாதனை படைத் துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங் கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

கருநாடக மாநிலம் ராம நகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக் கிராமத்தை சேர்ந்தவர் வெங் கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2 ஆவது மகன் பிரசாந்த்.

இவர் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல் லூரியில் பி.எஸ்சி. தோட்டக் கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் அனைத்து தேர்விலும் பல் கலைக்கழக அளவில் முதலி டம் பிடித்து சாதனை படைத் துள்ளார். இதை பாராட்டி அவருக்கு பாகல்கோட்டை யில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் 14 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பிரசாந்த் பதக்கங்களை பெற்றதும் அவரது தாய் வசந் தாவும், தாத்தா சென்னேகவு டாவும் மேடையில் ஏறி அவ ருக்கு முத்தமழை பொழிந் தனர். மேலும் ஆனந்தக் கண் ணீரில் திளைத்தனர். பிர சாந்தின் தந்தைக்கு வங்கியில் ரூ.2.40 லட்சம் கடன் உள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தின் மீது எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் வந்தது. இதனால் விவசாயத் தில் சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் பலரும் பாரம் பரியமாக ஒரே பயிரை சாகு படி செய்து வருகிறார்கள். இது பல சிக்கல்களை அவர் களுக்கு ஏற்படுத்துகிறது.

அவர்களுக்கு சரியான வழி காட்டுதல்களை வழங்கும் வகை யில் விவசாய விஞ்£னியாக மாறுவதே எனது குறிக்கோள். அத்துடன் எனது படிப்புக்காக எனது பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பேன் என்றார்.

Comments