ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·             மகாராட்டிராவில் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் மே 1 வரை 144 தடை உத்தரவை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் ஏப்ரல் 21 அன்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தில்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என பஞ்சாப் விவசாய அமைப்புகளின் தலைவர் தல்வாந்தி சாபோ அறிவித்துள்ளார்

தி டெலிகிராப்:

·     கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் .பி. மாநில சுகாதாரத் துறையின் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது என அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஸ் பதக் விமர்சித்துள்ளார்.

- குடந்தை கருணா

14.4.2021

Comments