வெளிநாடுகளில் இருந்து ரூ.1,380 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி ஒப்பந்த அறிவிப்பு திடீர் ரத்து

 உயர்நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து மின்சார கழகம் நடவடிக்கை

 சென்னை, ஏப். 19- உயர்நீதிமன் றம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து. ரூ.1,330 கோடி மதிப் பிலான நிலக்கரி இறக்குமதி ஒப்பந்த அறிவிப்பை தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திடீரென ரத்து செய்துள் ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜனவரி மாதம் வெளி நாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி இறக்கு மதி செய்வது தொடர்பான ஒப் பந்த அறிவிப்பை வெளிட்டது.

அதை எதிர்த்து தூத்துக்கு டியைச் சேர்ந்த நிலக்கரி நிறு னம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி பொறியா ளர் செல்வராஜ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கும் வித மாகபலவிதிமுறைகளை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உருவாக்கியுள்ளது. ஒரு ஒப்பந்த அறிவிப்பு பிறப் பிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும். ஆனால் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த அறிவிப்பு குறித்து இந்திய வர்த்தக இத ழில் அறிவிப்பு வெளியிட வில்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற உள்ளது. இதுகுறித்து வருவாய் புல னாய்வு இயக்குநரக தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் கொண்ட கூட்டுப் புலனாய் வுக் குழுவை அமைத்து விசா ரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

செல்வராஜ் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கடந்த மார்ச் 12ஆம் தேதி விசாரித்தனர். அப்போது, ஒப்பந்தம் முறை கேடு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடு நடை பெற்றது உறுதி செய்யப்பட்டால் நிலக் கரி ஒப்பந்தம் ரத்து செய்யப் படும் என்று நீதிபதிகள் எச் சரிக்கை செய் திருந்தனர்.

இந்த நிலையில் வெளிநாடு களில் இருந்து ரூ.1,330 கோடி மதிப்பிலான 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு மின் உற் பத்தி மற்றும் பகிர்மான கழ கம் திடீரென ரத்து செய்துள் ளது. இதற்கான காரணத்தை அக்கழகம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments