தமிழ்நாடெங்கும் அண்ணல் அம்பேத்கரின் 131ஆவது பிறந்த நாள் விழா

சென்னை,ஏப்.18- தமிழகமெங்கும் கழகப்பொறுப்பாளர்கள் அண் ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் 14.4.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கழகப்பொறுப் பாளர்களுடன் பல்வேறு அமைப்பினரும் இணைந்து மரியாதை செலுத்தினர்.

ஆவடி : 14.04.2021 அன்று காலை  ஆவடி கழக மாவட்ட  மிட்டனமல்லியில்  உள்ள சமூகப் புரட்சியாளரும்  சட்ட மேதையுமான பாபாசாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு  அம்பேத்கர் உருவ சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பாகவும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பாகவும்.மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் பா.தென்னரசு, நகர தலைவர் கோ.முருகன், முன்னாள் படைவீரர் முருகேசன், .தமிழ்மணி. திமுக பொறுப்பாளர்கள் வட்டக் கழக செயலாளர் சிவகுமார்,சீமான், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பாக மா.துரையரசன், இளங்கோவன், .வசந்த், தில்லைநாதன், கு.தினேஷ்குமார், ராஜ்கமல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சே.நிர்மல்குமார், தீபன்குமார், தியாகராசன் மற்றும் இருபால் தோழர்கள் கலந்து கொண்டனர்.

அரசம்பட்டி: அம்பேத்கர் பிறந்தநாள் விழா கிருட்டினகிரி மாவட்டம், அரசம்பட்டியில், கிருட்டினகிரி மாவட்ட தலைவர் . அறிவரசன் அவர்கள் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பர்கூர் ஒன்றிய செயலாளர் பா. பிரதாப் ,மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சக்திவேல் மற்றும் அம்பேத்கர் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

கிருட்டினகிரி: கிருட்டினகிரி நகரில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் அவர்கள் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மாலை அணிவித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

வட்டாட்சியர் அலுவலக வளாக சிலை,  பாப்பாரப்பட்டி, தேவ சமுத்திரம், மோட்டூர் ஆகிய இடங்களில் விழா கொண்டாடப் பட்டது. இதில் பகுத்தறிவு ஆசிரியர் அணித்தலைவர் .லூயிஸ் ராஜ் ,ஆசிரியர் கிருஷ்ண வேல், நகர தலைவர் கோ தங்கராசன், பகுத்தறிவாளர் கழக நகர தலைவர் சா .நாகராசன் ,தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் எல்அய்சி. மனோகர், ஒன்றிய தலைவர் .மாது, செயலாளர் கி. வேலன் மாவட்ட மாணவர் கழக தலைவர் மா. தமிழ்மணி, கலை பாரதி மாணவர் கழக தோழர்கள் சிறீதர், பாபு, வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை சாலை, ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் அருகில், 14.4.2021 புதன் காலை 9 மணியளவில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர்களுடன் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்று அண்ணல் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர்.

திருத்துறைப்பூண்டி: அம்பேத்கர் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2021 காலை 10.00 மணிக்கு திருத்துறைப் பூண்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி மாலை அணிவித்தார்கள். நிகழ்ச்சியில்  திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சிவக்குமார், செ.சி.காவியன், செ.சி.கண்மணி, திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் அஜெ.உமாநாத், திருத்துறைப்பூண்டி மாவட்ட  பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ரெ. புகழேந்தி, திருத்துறைப்பூண்டி  நகர தலைவர் தி.குண சேகரன், ஒன்றிய செயலாளர் தலைவர் சு.சித்தார்த்தன், மன்னை மாவட்ட துணை செயலாளர் விக்ரபாண்டியம் வீ.புட்பநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.சுரேஷ் முரளி, நகர செயலாளர் .நாகராஜன்,  ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

காஞ்சிபுரம்: அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவையொட்டி 14.4.2021  அன்று காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரத்தில்,  பெரியார் இல்லத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. காஞ்சி கதிரவன் மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Comments