புரட்சியாளர் அம்பேத்கரின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழகம், புதுவையில் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது

சென்னை, ஏப்.15 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (14.4.2021) தமிழகம், புதுவையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்திற்கு மலர் தூவியும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

புதுச்சேரி

புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீர மணி தலைமையில், கழகத் தோழர்கள் முன்னிலையில் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சென்னை - பூவிருந்தவல்லி

பூவை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் பூவிருந்தவல்லி பகுதி சார்பில் 14.04.2021 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன் தலைமையில் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி கழகத் தோழர்கள் பூவை தமிழ்ச்செல்வன், மணிமாறன், சாந்தசீலன், வெங்கடேசன், மகளிரணியினர் செல்வி, தொண்டறம், லலிதா அன்புச் செல்வி, சவுமியா ஆகியோர் கலந்து கொண்டனர்

மயிலாடுதுறை

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன் னிட்டு மயிலாடுதுறையில் மாவட்ட கழகத்தின் சார்பில் அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் குணசேகரன் செயலாளர் கி.தளபதிராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர். பெரி யாரிய அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், நகர செயலாளர் அரங்க.நாகரத்தினம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருள்தாஸ், மாவட்ட ..செயலாளர் .சாமிதுரை, இரெ.புத்தன், பெரியார் பிஞ்சுகள் அறிவன், இன்பன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட பகுதிகளில் திராவிடர் கழகம் சார்பில் டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

"புரட்சியாளர்" பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 131 ஆவது பிறந்தநாளையொட்டி 14.04.2021 அன்று திருப்பூர் மாநகர் கரைத்தோட்டம் பகுதியில் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாநகர செயலாளர் பா.மா.கருணாகரன் தலை மையிலும், தாராபுரம் பெரியார் திடலில் தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் .சண்முகம் தலைமையிலும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, அடிப்படைவாத ஒழிப்பு குறித்த உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.நிகழ்வில் கழக தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

காரைக்கால்

காரைக்கால் மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாள் விழா காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலைக்கு காரைக்கால் மண்டல திராவிடர் கழகத் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மண்டல செயலாளர் பொன். பன்னீர்செல்வம் காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கணபதி காரைக்கால் மண்டல மாணவர் கழக தலைவர் மோகன்ராஜ். காரைக்கால் மண்டல மாணவர் கழக  செயலாளர் இராகுணபாலன். இளைஞரணி தோழர் சசிகுமார் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் புதுச்சேரி மூலக்குளம் தமிழ்ச்செல்வன் .மற்றும் அனைத்து கட்சி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மண்டல இளைஞரணி தலைவர் மு.பெ. பெரியார் கணபதி அம்பேத்கரின் சிறப்பு களை முழக்கமிட்டதை அனைத்துக் கட்சித் தோழர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வியப்புடனும் கூர்ந்து கவனித்தனர். இறுதியாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் புதுச்சேரி மூலக்குளம் தமிழ்ச்செல்வன் அவர்கள் தேநீர் வழங்கி சிறப்பித்தார்.

தென்சென்னை

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள கழக பகுத்தறிவு பலகையின் கீழ் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  நிகழ்வில் மாவட்டத் தலைவர் இரா வில்வ நாதன், மாவட்ட இளைஞரணி  செயலாளர்  .மணித்துரை, இளைஞரணி அமைப்பாளர். .சிவசீலன், மு.சண்முக பிரியன், பொறியாளர் .குமார், .விஜயராஜா, மஞ்சைநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் புரட்சியாளர்  சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் - 131 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி காவேரிப்பட்டணத்திலுள்ள அவரது சிலைக்கு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.செல்வம் தலைமையில்  திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன் ஆகியோர் அண்ணல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நிகழ்வில் மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணிசெயலாளர் வே.புக ழேந்தி, ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, நகர அமைப்பாளர் பூ. இராசேந்திபாபு,  வி.சி.. ஒன்றியச்செயலாளர் பெ.சசிக் குமார், .சரவணன், .சுரேசு, சி. வெங்கடேசன் சி.வெங்க டாசலம், .விஜயகுமார், குமார் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தருமபுரி

டாக்டர் அம்பேத்கர் 131ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என். வி.எஸ். செந்தில்குமார் அவர்கள் தர்மபுரி கோல் டன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சங்கராபுரம்

சங்கராபுரத்தில் அண்ணல் அம்பேத்கர். 131 ஆவது பிறந்த நாளான இன்று 14.04.2021 திராவிடர் கழகத்தின் சார்பாகமாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்சியில் மாவட்டத் தலைவர் .சுப்பராயன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் மு.கலைச்செழியன்,சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.பாலசண்முகம், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் .கரிகாலன்

திருச்சி

அம்பேத்கர் பிறந்தநாள் அன்று திருச்சியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ்  அணிவித்தார். இந் நிகழ்ச்சியில் மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர், கல்பாக்கம் ராமச்சந்திரன்,  கனகராஜ்,  தமிழ் சுடர், முபாரக்,  முருகன், மகாமணி, சேவியர். நேதாஜி, பிரான்சிஸ்,  மாவடியான்,  திருநாவுக்கரசு , ராஜசேகர் சக்திகாந்த்,  துரைசாமி,  காட்டூர் காமராஜ்,  பாலசுப்பிரமணியன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்

தஞ்சை

புரட்சியாளர் அம்பேத்கர் 131ஆவது பிறந்தநாள் தஞ்சை மாதாக்கோட்டை சாலை பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது

ஈரோடு-குருவைரெட்டியூர்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா ஈரோடு மண்டல திராவிடர் கழகத்  தலைவர் .பிரகலாதன் ஏற்பாட்டில் ஈரோடு மாவட் டம் குருவைரெட்டியூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண் டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக சார்பில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் பூதப்பாடி .மணிகண்டன்,பவானி ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் தேவேந்திரன், பகுத்தறிவாளர் கழக ஈரோடு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம்,  திமுகழக சார்பில் நகர செயலாளர் சரவணன் மகளிரணி புஷ்பா,மாலதி விஜயா, தமிழ் புலிகள் சார்பில் மாவட்ட செயலாளர் வேங்கை.பொன்னுச்சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் செம்பன், பூனாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ், தேணி மடுவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேட்டூர்

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன் அவர்கள் ஓமலூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் .சாமுராய்குரு, திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் பெ.சவுந்தரராஜன் ஆகியோர் பங் கேற்றனர்.

பெரியகுளம்

பெரியகுளத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் நல்லாசிரியர் சிவபாலன் பொறியாளர் ஆறுமுகம்.

பொள்ளாச்சி

திராவிடர் கழகம் சார்பில் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்  பிறந்த நாள் விழா ஜமீன் ஊத்துக்குளி,  காளிங்கராயர் நகர், கருமாபுரம் ஆகிய பகுதியில் எழுச்சியோடு அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு மலர்கள் தூவியும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் விழா இனிதே நடைபெற்றது.. இந்நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் தி.பரமசிவம்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி காதர் அலி, ஆதித்தமிழர் பேரவை இரவிச்சந்திரன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் சி.மாரிமுத்து, சு.ஆனந்தசாமி, வீரமலை, ஊத்துக்குளி நாகராசு, கார்த்திக் குரும்பபாளையம், திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

கோவை

கோவையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 131 ஆவது பிறந்தநாளையெட்டி திராவிட மாணவர் கழகம் சார்பில் கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்கள் திருவுருவ சிலைக்கு

திராவிடர் கழக கோவை மண்டல செயலாளர் .சிற்றரசு தலைமையில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி யோடு கொண்டாடப்பட்டது. நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் .சந்திரசேகர், மாவட்ட செயலாளர் திக செந்தில்நாதன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் இராசி பிரபாகரன், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல், மாவட்ட துணை செயலாளர் காளிமுத்து, தமிழ்முரசு, இரா.பிரபு,  மாவட்ட மாணவர் கழக ..கவுதமன், வெ.யாழினி, வெ.இளமதி, தமிழ் செல்வன், அஜித், இருதயராஜ், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் பெரியார் புத்தக நிலையம் பொறுப்பாளர் .மு.ராஜா உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழக மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, தோழர்களும் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் ஏராளமான திமுக தோழர்கள், காளிஸ்வரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சி தோழர்கள், தோழர் ஈஸ்வரன் தலைமையில் ஏராளமான மதிமுக தோழர்கள், பிரபு, இப்ராகிம் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி தோழர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்று பிறப்பித்தனர்.

சிதம்பரம்

சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் குமாரகுடியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி மாவட்ட கழக துணைத் தலைவர் மழவைகோவி  பெரியார்தாசன் தலைமையில்  மாலை அணிவித்து  மரியாதை  செலுத்தப்பட்டது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை மதுரைப் சாலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில், 14.4.2021 புதன் காலை 9 மணியளவில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர்களுடன் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்று அண்ணல் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர்.


Comments