கரோனா காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும்

 ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை,ஏப்.10- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளி யிட்டுள்ள அறிக்கை :

கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகின்ற சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்ற சூழ்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

காரணம் என்னவென்றால் காலையில் பள்ளிக்கு வருதற்கு முன் சுகாதாரத்துறை அறிவித்திருக்கின்ற கட்டுப்பாடோடு வருவார்களா பள்ளியில் இருந்து வெளியில் செல்லும்போதும் கட்டுப்பாடோடு செல்வார்களா என்ற அய்யம் ஏற்படுகிறது. 

மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க

ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி, ஏப்.10 போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா  பரவலால் 2020 மார்ச் 24இல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. அதனால் ஓட்டுநர் உரிமம், வாகன தகுதிச்சான்று, பர்மிட் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது.

அதாவது 2020 மார்ச் முதல் ஆறு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘2020 பிப். 1 முதல் 2021 மார்ச் 31 வரை காலாவதியாகும் அனைத்து போக்குவரத்து ஆவணங்களும் 2021 ஜூன் 30 வரை செல்லத்தக்கவைஎன மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா  இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கரோனா  பரவல் அதிகரித்து விடக்கூடாது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

Comments