மரபணு மாறிய கரோனா: 1,189 பேருக்கு பாதிப்பு

புதுடில்லி, ஏப்.18  'நம் நாட்டில், மரபணு மாறிய கரோனா வைரசால், இதுவரை, 1,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை,  16.4.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: உலகின் பல நாடுகளில், மரபணு மாற்றங்களுடன், கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வகைகள், வேகமாக பரவும் திறன் கொண்டவை.பிரிட்டனில் உருவான புதிய வகை கரோனா வைரஸ், அய்ரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது. இதேபோல், இரட்டை மரபணு மாற்றங்களுடன் உருவாகி உள்ள வைரஸ் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது.

நம் நாட்டில், இந்த வைரஸ் வகைகளால் பாதிக்கப்படுவோரின் மாதிரிகளை பரிசோதிப்ப தற்காகவே, 10 தனிப் பரிசோதனை மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மய்யங்களில், இதுவரை, 13 ஆயிரத்து, 614 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதில், 1,189 பேர், மரபணு மாற்றத்துடன் கூடிய கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களில், 1,109 பேர், பிரிட்டன் வைரஸ் வகையால் பாதிக்கப்பட் டுள்ளனர். 79 பேர், தென் ஆப்ரிக்க வகையாலும்; ஒருவர், பிரேசில் வகையாலும் பாதிக்கப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments