தமிழகத்தில் புதிதாக 10,986 பேருக்கு கரோனா ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு

சென்னை,ஏப்.21- தமிழகத்தில் புதிதாக 10,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி யாகியுள்ளதுசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஒரே நாளில் முதியவர்கள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று (20.4.2021) ஆண்கள் 6,689, பெண்கள் 4,297 என மொத்தம் 10,986 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டனர்வெளிநாடுவெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 56பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளதுஅதிகபட்சமாக சென் னையில் 3,711, செங்கல்பட்டில் 1,029, கோவையில் 686, திருவள்ளூரில் 508 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுஇதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 13,378 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 57,927 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 20,369 பேர் குணமடைந் துள்ளனர்நேற்று (20.4.2021) மட்டும் சென்னையில் 1,967 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6,250 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்சென்னையில் 28,005 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசுதனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட48 பேர் உயிரிழந்தனர்சென்னையில் மட்டும் 17 பேர் இறந்துள் ளனர்இதன்மூலம் தமிழகத்தில் கரோ னாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளதுசென்னையில் மட்டும் 4,432 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென் னையில் 2 லட்சத்து 90,364,கோவையில் 68,835, செங்கல்பட்டில் 68,526, திருவள் ளூரில் 52,080 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளதுதமிழகத்தில் 263 அரசுதனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 14 லட்சத்து 549 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளனநேற்று மட்டும் 1 லட்சத்து 1,329 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments