10 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க மனுமீது ஏப்.20இல் இறுதி முடிவு

உச்சநீதிமன்றத்தில் கோவா சட்டமன்ற அவைத் தலைவர் தகவல்

 புதுடில்லி,ஏப்.8- 'கோவாவில், காங்கிரசில் இருந்து விலகி பா..,வில் இணைந்த, 10 சட்ட மன்ற உறுப்பினர்கள்மீதான தகுதி நீக்க மனு மீதான இறுதி உத்தரவு, ஏப்ரல் 20ஆம் தேதி பிறப்பிக்கப்படும்' என, கோவா சட்டமன்ற அவைத்தலைவர் ராஜேஷ் பட்னேகர், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா... ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்திரகாந்த் காவ்லேக்கர் உட்பட, 10 காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கடந்த, 2019 ஜூலையில், பா...வில் இணைந்தனர். இதன் வாயிலாக, கோவா சட்டசபையில், பா...வின் பலம், 27 ஆக உயர்ந்தது. காங்கிரசின் பலம், அய்ந்தாக குறைந்தது. பா...வில் இணைந்த, 10 உறுப்பினர்களை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யக் கோரி, சட்டமன்ற அவைத்தலைவர் ராஜேஷ் பட்னேகரிடம், காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுமீதான இறுதி உத்தரவை பிறப்பிக்காமல், சட்டமன்ற அவைத்தலைவர் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், தகுதி நீக்க மனு மீது இறுதி முடிவு எடுக்க அவைத்தலைவருக்கு உத்தரவிடுமாறு, காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..பாப்டே தலைமை யிலான அமர்வு முன், இந்த மனு விசார ணைக்கு வந்தது. அப்போது, 'தகுதி நீக்க மனு மீது, வரும், 29ஆம் தேதி பேரவைத் தலைவர் இறுதி முடிவை அறிவிப்பார்' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

'அவ்வளவு கால தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 'வரும், 22 ஆம் தேதி அறிவிக்கப்படும்' என அரசு தரப்பு தெரிவித்தது. அதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், 20ஆம் தேதிக்குள் அறி விக்குமாறு கூறினர்.

இதையடுத்து, அவைத்தலைவர் ராஜேஷ் பட்னேகருடன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆலோசனை நடத்தினார். பின், வரும், 20ஆம் தேதி, தகுதி நீக்க மனு மீது இறுதி முடிவை அறிவிக்க, அவைத் தலைவர் ஒப்புக்கொண்டு உள்ளதாக, துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image