சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து; 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுடில்லி, ஏப்.15 கரோனா பரவல் காரண மாக சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபி எஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மே 4ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்க இருந்தது.

இந்தியாவில் கரோனா பரவல் 2ஆவது அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என டில்லி, மகாராட்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும், காங்., முன்னாள் தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று (ஏப்.,14) பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு 15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments