ஓமனில் மொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது

மஸ்கட், ஏப். 8- ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், 1,208 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்

தற்போது ஓமன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 482 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 6.4.2021 அன்று  மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 764 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட் சத்து 48 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதமாக இருந்து வருகிறது.

கரோனா தொற்று காரணமாக நேற்று (7.4.2021) மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் ஓமனில் கரோனாவுக்கு பலியானவர் களின் மொத்த எண்ணிக்கை 1,728 ஆக இருந்து வருகிறது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 196 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கரோனா

அபுதாபி, ஏப். 8- அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 944 டி.பி.அய். மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,988 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று (7.4.2021) மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 138 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி யுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக நேற்று (7.4.2021) ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண் ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 13 ஆயிரத்து 735 பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

தொடர்ந்து சில நாட்களாக ஒருநாள் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image