ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சம் பேர்

புதுடில்லி, ஏப்.11 ஒவ்வொரு நாளும் கரோனா புதிய உச்சம் தொடும் பரிதாப நிலையில் நாடு உள்ளது. ஒரே நாளில் 1.52 லட்சம் பேருக்கு கரோனா புதி தாக பாதித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.

கரோனா வைரஸ் என்ற கொடிய வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக இந்தியா கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் லட்சத்துக் கும் மேற்பட்டோரை தினமும் தாக்கி வருவதும், ஒவ்வொரு நாளும் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருவதும் பரிதாபமாக அமைந் துள்ளது.அந்த வகையில் இன்று (11.4.2021) காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 879 பேருக்கு கரோனா தொற்று புதிதாக தாக்கி இருக்கிறது. இது புதிய உச்சம் ஆகும். இந்தியாவில் இந்த நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளான வர்களின் மொத்த எண் ணிக்கை 1 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடு களின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் தொடரு கிறது.

நேற்று புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளானோரில் 82.82 சதவீதத்தினர் மராட் டியம், சத்தீஷ்கார், உத்தரப் பிரதேசம், டில்லி, கருநாடகம், தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ் தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மராட்டியத்தில் மட்டுமே நேற்று 58 ஆயிரத்து 993 பேர் வைரசின் பிடியில் சிக்கி உள்ளனர். சத்தீஷ்காரில் 11,447 பேரும், உத்தரபிரதேசத்தில் 9,587 பேரும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக் கிறார்கள்.

கரோனா வைரசால் ஏற் படுகிற உயிர்ப்பலியும் இப் போது தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. 9.4.20201 அன்று ஒரே நாளில் 780 பேர் கரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 794 ஆக பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் கரோனாவுக்கு இது வரை இந்தியாவில் நேரிட்ட உயிர்ப்பலியின் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றும் வழக்கம்போல மராட்டிய மாநிலத்தில் அதிக பட்சமாக 301 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

சத்தீஷ்காரில் 91 பேரும், பஞ்சாப்பில் 56 பேரும், கருநாடகத்தில் 46 பேரும், குஜராத்தில் 42 பேரும், டில்லியில் 39 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 36 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

கரோனா பாதிப்பு அதி கரித்து வருகிற நிலையில், பரிசோதனையும் அதிகரித்து வருகிறது. 9.4.2021 அன்று ஒரே நாளில் 11 லட்சத்து 73 ஆயிரத்து 219 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன.

இதுவரை நாட்டில் 25 கோடியே 52 லட்சத்து 14 ஆயிரத்து 803 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டி ருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Comments