"PERIYAR E.V.RAMASAMY A Man Ahead of his time" தந்தை பெரியார் குறித்த ஆங்கில புத்தகத்தின் ஆய்வு - காணொலிக்கூட்டம் - 3

மாயையை உடைக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் புதிதாக தமிழ் தேசியம் என்ற ஒருகருத்து வந்திருக்கிறது. இதற்கு முன்னால் திராவிட இயக்கம்தான் தமிழ் தேசியத்தையே வளர்த்துவிட்டது. இன்றைக்கு தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் திராவிட இயக்கம் தவறானது என்று சொல்ல முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு, தமிழ் தேசியத்தைப் பற்றி முதலில் பேசியது பெரியார்தான் என்பது  தெரியாது. பெரியார் தமிழரே இல்லை என்று, அவர்கள் ஒரு மொழியில் பேசுகிறார்கள்.அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு இந்த நூல் உதவும் என்று கருதினேன். அவர்கள் சொன்னதுபோல, காலவரிசைப்படி பெரியாரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய வாசிப்பு பற்றியும் எனக்குத் தெரியும். பெரிய புத்தகத்தைப் படிக்க மாட்டார்கள். ஆனால் தனித்தனியாக, தலைப்புகள் என்றால் படிப்பார்கள். உதாரணமாக நாளை பெண்கள் தினம். நீங்கள் பெரியாரின் பெண்ணுரிமை குறித்து பேசவேண்டுமென்றால், பெரியாரின் பெண்ணியம் என்னும் ஒரு தலைப்பை மட்டும் இந்தப் புத்தகத்தில் படித்தால் போதும். சமூக நீதி,இட ஒதுக்கீடு பெரியாரின் கருத்து என்னவென்று நீங்கள் பேசவேண்டும், எழுத வேண்டும் என்றால் இந்தப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் படித்தால் போதும். அதனால்தான், இந்த நூலில் இந்த 'ஸ்டைலை' நான் எடுத்துக்கொண்டேன். மொத்தத்தில் தெரியப்படுத்துதல்தான் நோக்கம். ஆங்கில ஊடகங்களில், ஆங்கிலம் பேசும் மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும் என நினைத்தேன். ஏற்கெனவே இருக்கும் மாயையை உடைக்கவேண்டும் என நினைத்தேன்.அவர்கள் ஏற்படுத்திய மாயையிலிருந்து எதிர் கால சந்ததியாவது விடுபடவேண்டும் என் நினைத்தேன். பெரியாரை எடுத்துக்கொண்டால், எல்லாவற்றிலும் அவர் 'the man ahead of his time'. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அறிவியல் எப்படி இருக்கிறது என்றால் ISRO™ ராக்கெட் தயாரித்து அதனை திருப்பதிக்கு அனுப்புகிறார்கள். பெரியார் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

நூற்றாண்டைக் கடந்த அறிவியல் சிந்தனை

அவர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். முறையான படிப்பு அவருக்கு இல்லை என்றாலும் நூற்றாண்டைக் கடந்து அறிவியலைப் பற்றி சிந்தித்திருக்கிறார். அதனைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆங்கிலப்புத்தகமாக இருப்பதால் இது இண்டர் நேசனல் கம்யூனிட்டிக்கு பயனுள் ளதாக இருக்கும் என நினைத்தேன். எழுதினேன். இந்த நூலை இன்று இரண்டு பேர் ஆய்வு செய் திருக்கிறார்கள்.ஒருவர் டாக்டர் சுபாஷினி. தமிழுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து கொண்டிருப்பவர். இன்னொருவர் பிரின்ஸ். இந்தப் புத்தகத்திற்காக தன்னுடைய பங்களிப்பாக நிறைய செய்திருக்கிறார். நன்றாக அச்சாகி வந்திருக்கிறது என்று சொன்னார்கள்.அதில் கூட பிரின்ஸின் பங்கு இருக்கிறது.அதைப்போல பதிப்பாளர் ஒளிவண்ணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சி. பெரியார் பன்னாட்டு மய்யத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இதனை கொண்டு செல்ல முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றி" என்று குறிப்பிட்டார்.

கோ.ஒளிவண்ணன்

பாபு ஜெயக்குமார் அவர்களோடு தனக்கு பல்லாண்டுகளாக இருக்கும் தொடர்பு, முல்லைப் பெரியாறு பற்றி "இந்தியன் எக்ஸ்பிரஸ்" இதழில் தனித்துவமாக வந்த அவரது கட்டுரை, அதைப் பாராட்டியது, மகிழ்ச்சி அடையாமல்  நீங்கள் லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் எழுதுவீர்களா என்று அவர் கேட்டது, எழுதுவேன், யாராவது தப்பாக எழுதினால் நான் எழுதுவேன் என்று சொன்னது,”இதுதான் நம்மிடம் இருக்கும் குறை, உங்களை மாதிரி 100 பேர் பாராட்டி விட்டார்கள், ஆனால் 10 பேர் இந்தக் கட்டுரை எழுதியதற்காக என்னைத் திட்டி, "இந்தியன் எக்ஸ்பிரஸ்" லெட்டர் டூ தி எடிட்டரில் எழுதியிருக்கிறார்கள், இப்படி என்னை நேரடியாகப் பாராட்டி பிரயோசனம் இல்லை, உங்களைப் போன்றவரகள் லெட்டர்ஸ் டூ தி எடிட்டருக்கு எழுத வேண்டும், அப்போது தான் எங்களைப் போன்றவர்கள் அங்கு நிலைக்க முடியும்என்று சொன்னார் என்று குறிப்பிட்ட கோ.ஒளிவண்ணன் அப்போதிருந்து நல்ல கட்டுரைகளுக்கு, விடுதலை என்றாலும் கூட பாராட்டி எழுதுவதை வழக்கமாகக் கொண்டேன் எனக்குறிப்பிட்டு பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். இந்தப் புத்தகம் வெளிவருவதில் பிரின்ஸ் அவர்களின் பங்களிப்பிற்கும், பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் பங்களிப்பிற்கும் நன்றி கூறி, தமிழ் தெரியாத, உலகம் முழுவதும் இருக்கும் நெஞ்சங்களுக்கு  இந்தப் புத்தகத்தை கொண்டு சேர்ப்போம், குறுகிய காலத்தில் மிக நேர்த்தியாக இந்தப் புத்தக அறிமுகக் கூட்டத்தை நடத்திய பெரியார் பன்னாட்டு மய்ய அமைப்பிற்கும் அதன் தலைவர் அண்ணன் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் நன்றி எனக்கூறி உற்சாகமாக பதிப்பு அனுபவங்களைப்  பகிர்ந்துகொண்டார்.

பெரியார் உலக வலம் வருவார்

நன்றி ஒளிவண்ணன் எனக்குறிப்பிட்ட மருத் துவர் சோம.இளங்கோவன் அவர்கள் தங்களின் இரு கரங்களாகப் பணியாற்றும் தங்கள் இணையர் நளினி அவர்களுக்கும், தங்கள் நிறுவனத்திற்கும் நன்றி எனக்குறிப்பிட்டார்.இந்த நிகழ்வைப் பற்றிய கருத்துகளை மதுரை வா.நேரு,நியூயார்க் பாலா சாமி நாதன்,சிகாகோ சோம.வேலாயுதம்,மும்பை இரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.அய்யா சோம.வேலாயுதம் அவர்கள் தாங்கள் படிப்பது மட்டுமல்லாது,இந்தப் புத்தகத்தை பள்ளி,கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு  அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு மும்பையில் வழங்கப்பட்ட  நரேந்திர தபோல்கர் விருதுபற்றியும், அந்த அமைப்பாளர்கள் தன்னோடு ஆசிரியருக்கு விருது வழங்குவது பற்றி பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியையும், விருதில் அளிக்கப்பட்ட ரூ 1 இலட்சம் ரூபாயை ஆசிரியர் அவர்கள் திருப்பி அந்த அமைப்புக்கே அளித்ததையும், அமெரிக்காவில் 2019இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குவாழ் நாள் சாதனையாளர் - மனித நேய விருதுவழங்கப் பட்டதையும் குறிப்பிட்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ,அமெரிக்காவில் நூறு இளம் குழந்தைகள் பெரியார் பற்றி,தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பேசியதை பாபு ஜெயக்குமார் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். கலந்து கொண்ட அனைவருக்கும்,ஒத்துழைப்பு அளித்த நியூசெர்சி பாலா,மற்றும் தங்களை வெளிக் காட்டாமல் ஒத்துழைப்பு அளிக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பினைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களது உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முனைப்பால் இன்று பல பல்கலைக்கழகங்களில் தந்தை பெரியார் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன. அவையெல்லாம் விரைவில் வெளிவரும்.அப்போது இன்னும் வீச்சாக பெரியார் உலக வலம் வருவார் .அனைவருக்கும் நன்றி,நன்றி என்று கூறி நிகழ்வை மருத்துவர் சோம்.இளங்கோவன்  நிறைவு செய்து வைத்தார்.

தொகுப்பு: வா.நேரு

(நிறைவு)

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image