பிற இதழிலிருந்து... : நிரப்பப்படாமல் உள்ள OBC/SC பிரிவினருக்கான ஆசிரியர் பணியிடங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில்   இயங்கி வரும் உயர் கல்வி நிறுவனங்களில் நிரப்பப் படாமல் உள்ள ஆசிரியர் பணி இடங்கள் குறித்து கடந்த திங்கட்கிழமையன்று (15.3.2021) மக்களவை யில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் எழுத்து மூலமாக தெரிவித்த புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணி யிடங்களில் பாதிக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. எஸ்.ஸி.,/எஸ்.டி. (SC/ST) வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுள் 40 சதவிகிதம் காலியாக உள்ளன.

உயர்தரமான இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (IIM) கூட நிலைமை மோசமாகவே உள்ளதுSC மற்றும் OBC வகுப்பினருக்காக அவற்றில் ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 60 சதவிகிதத்திற்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன.  ST வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங் களுள் ஏறத்தாழ 80 சதவிகிதம் காலியாகவே உள்ளன.

பழங்குடியினருக்கு (ST)  ஒதுக்கப்பட்ட 24 பணியிடங்களுள் அய்ந்து மட்டுமே நிரப்பப்பட் டுள்ளன என்று இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியத் தொழில் நுட்பக் கழக (IIT)  நிறுவனங் களைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் அல்லா தார் பணியிடங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணியிடங்களின் ஒதுக்கீட்டு விஷயத்தில் IIT (அய்அய்டி) மற்றும் (IIM) (அய்.அய்.எம்) நிறுவனங்கள் விதி விலக்கு கோரி முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படாமல் உள்ளன. 42 பல்கலைக் கழகங்களில் ST வகுப்பின ருக்கென ஒதுக்கப்பட்ட 709 துணைப் பேராசிரியர் பணியிடங்களுள் 500-க்கும் அதிகமான பணியி டங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் ST பிரிவின ருக்கென ஒதுக்கப்பட்ட 137 பேராசிரியர் பணி யிடங்களுள் ஒன்பது மட்டுமே நிரப்பப்பட்டுள் ளதாக தகவல்கள் கூறுகின்றன. 93 சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளன என்றே இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசுப் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் 1062 பேராசிரியர்களுள் ST வகுப்பினர் (1%) ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென மத்தியப் பல்கலைக் கழகங்களில் 2206 துணைப் பேராசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 64 சதவிகித இடங்கள் மட்டுமே நிரப் பப்பட்டுள்ளன. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென ஒதுக்கப்பட்ட 378 பேராசிரியர் பணியிடங்களுள் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன.

காலியான பணியிடங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள இந்த நிலையில் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் எழுத்து மூலமாக -

"2019ஆம் ஆண்டின் - மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக் கீட்டுச் சட்ட விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு எல்லா வகையிலும் முழு அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது" - என்று பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளார் கீழ்க்கண்டவாறு:

"கல்வி அமைச்சகமும், பல்கலைக் கழக மானியக் குழு (UGC) வும் காலியாக உள்ள பணி யிடங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ந்தும், கவனித் தும் வருகின்றன" ஆனால் கடைசியாக பல்கலைக் கழகங்களின் மீதே அவர் பழி சுமத்தி விடுகிறார்.

"நாடாளுமன்ற சட்ட விதிகளின்படி மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு ஆசிரியர் பணியிடங் களை நிரப்பும் அதிகாரம் உள்ளது. சுதந்திரமாக செயல்படும் உரிமை அவற்றுக்கு உள்ளதால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பும், கடமையும் அவற்றுக்கு உள்ளன" என்றும் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதமே பல்கலைக் கழக மானியக்குழு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஆறு மாத அவகாசம் அளித்து உத்தரவு அனுப்பியுள்ளது. ஆறு மாதங்களுக்குள் ஒவ்வொரு பல்கலைக் கழகமும் காலி பணியிடங் களை நிரப்பத் தவறினால் மானியம் வழங்குதல் நிறுத்தப்படும் என்று எச்சரித்திருந்தது ஹிநிசி (பல்கலைக் கழக மானியக் குழு).

மக்களவையில் திங்களன்று வழங்கப்பட்ட விவரங்களின்படி 42 பல்கலைக் கழகங்களில் மொத்தம் 6,074 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றுள் 74 சதவிகித பணியிடங்கள் ஒதுக்கீட் டில் அடங்கியுள்ளவை.

நன்றி: 'தி இந்து' 16.3.2021

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image