'இமயத்தைச் சிதறடித்தார் பெரியார்' - புத்தகம் வெளியீடு

 

தூத்துக்குடி. மார்ச் 13- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 'இமயத்தைச் சிதறடித்தார் பெரியார்' என்ற புத்தக வெளியீட்டு விழா 6.3.2021 அன்று மாலை 5 மணி அள வில் தூத்துக்குடி, பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கி னில் நடைபெற்றது.

விழாவிற்குத் தட்டப்பாறை கரு.மாரியப்பன் தலைமை ஏற்றார். மண் டலத் தலைவர் சு.காசி முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர்

.வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் செ.வெற்றிவேல் புத்தகத்தினை வெளி யிட்டு உரையாற்றினார். முதல் புத்த கத்தினை பணி நிறைவு பெற்றக் காவல்துறை ஆய்வாளர் சீ.மனோ கரன் பெற்றுக்கொண்டார். அடுத்து, பெரியாரியச் சிந்தனையாளர், பேராசி ரியர், கி.ஆழ்வார், ‘இமயத்தைச் சிதற டித்தார் பெரியார்' என்ற புத்தகத்தின் உள்ளுறையினைத் தெளிவாக ஆய்வு ரையாக எடுத்துக் கூறினார்.

இறுதியாகப் புத்தக ஆசிரியர் மா.பால்ராசேந்திரம் ஏற்புரையாகத் தந்தை பெரியாரின் பணிகளையும், அய்யாவின் கொள்கை அடியொற்றித் தமிழர் தலைவர், ஆசிரியர் ஆற்றி வரும் அரும்பணிகள் பற்றியும், இன் றையத் தேர்தல் காலத்தில் தமிழர்கள் அனைவரும் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய இன்றியமையாப் பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

விழாவில் மலிவு விலையில் புத்த கம் வழங்கப்பட்டது. 50 புத்தகங்கள் தோழர்களால் ஆர்வமுடன் வாங்கப் பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி யின் முன்னணி தலைவர், தோழர்

தா. பாண்டியன் மறைவுக்கு மாவட் டக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

உரத்தநாட்டில் தந்தை பெரியா ரின் சிலை மீது காவித் துணியைப் போர்த்தியும், காவிக்குல்லா அணிவித் தும் இழிவுபடுத்திய சங்பரிவார், மத வெறி அரசியல் கும்பலை வன்மையா கக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடைபெறவிருக்கிற கழகப் பொதுக் குழுவில் மாவட்டக் கழகம் சார்பில் கலந்து கொள்வது எனவும், பொதுக் குழு நிறைவேற்றிடும் தீர்மானங்களை மாவட்டத்தில் செயல்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

நிறைவாக வழக்குரைஞர்

பா.இராசேந்திரன் நன்றியுரை வழங்கிட விழா சரியாக இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.

விழா சார்பாகச் சிறப்பு அழைப்பா ளர்களுக்குப் புத்தக ஆசிரியர் பயனாடை அணிவித்தார். பெரியார் மய்யம் சார்பிலும் பயனாடை அணி விக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, மாவட்டத் துணைச்  செயலாளர் இரா.ஆழ்வார், மாநகர செயலாளர் சி.மணிமொழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.காலாடி, .சக்திவேல், சு.திருமலைக் குமரேசன், பொன்.பொன்ராஜ், பா.பழனிச்சாமி, இரா.அய்யம்பெருமாள், கி.கலைச்செல்வன், செ.செல்லதுரை, பொ.சக்திவேல், மோ.அன்பழகன், வெ.சிவசங்கரன், இலா.விக்டர், கோபால்சாமி, கவிஞர் இளமுருகு, பொ.போஸ், சி.கோமதிநாயகம், சி. பிரபாகரன், வழக்குரைஞர் .செல்வம், நாகராஜன், இராசாமணி, .பெரியார்தாசன், .செல்வராஜ், சங்கரலிங்கம், சுப்பையா உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments