கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்த பா.ஜ.க.

கொச்சி, மார்ச் 16- கேரள சட்டப்பேரவை தேர்தலில் மானந்தாவடி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறி விக்கப்பட்டவர் தாம் பாஜக வின் உறுப்பினர் கூட இல்லை என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இங் குள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக பாஜக வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.   நேற்று (15.3.2021) பாஜக சார்பில் போட்டியிடும் 115 வேட்பா ளர்களின் பெயர்களை அக் கட்சி அறிவித்தது.  இதில் மானந்தாவடி தொகுதியில் மணிகண்டன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

இவர் அங்குள்ள பனியா என்னும் பழங்குடி இனத்தின் ஒரே பட்டதாரி ஆவார்.  இவர் தனது பெயரை முக நூலில் மணிகுட்டன் என வைத்துள்ளார்.   இந்த பட்டி யல் வெளியானதில் இருந்து பலரும் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.   ஆனால் தாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்காததால் மணி கண்டன் மிகவும் வியப்பில் உள்ளார்.

இது குறித்து அவர், தாம் பாஜகவில் உறுப்பினரோ ஆர்வலரோ இல்லை எனவும் தமக்குத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என வும்தெரிவித்துள்ளார். 

இந்த தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் இங் குள்ள உள்ளூர் பிரபலங் களின் பட்டியலை பாஜக தயாரித்துள்ளதாகவும் ஆனால் அப்போதே மணி கண்டன் தாம் அரசியலுக்கு வர விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியில் உள்ள வேறு ஒருவரின் பெயருக்குப் பதி லாக மணிகண்டன் பெயர் தவறுதலாக இடம் பெற்று இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.    இந்த நிகழ்வு குறித்து உள்ளூர் மக்கள் பாஜகவை பற்றி மிகவும் கேலி யாகப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இந் நிகழ்வால் மாநிலத்தில் மற்ற தொகுதிகளில் பாஜகவின் வெற்றி குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதாகச் சொல்லப் படுகிறது.

ஏற்கெனவே வயநாடு மாவட்டத்தில் கல்பேட்டை தொகுதி மற்றும் மானந் தாவடி தொகுதியில் மட்டும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக அறிவித்துள்ள நிலை யில் அதிலும் ஒரு வேட்பாளர் போட்டியிடப்போவ தில்லை.  எனவே இந்த தொகு தியில் காங்கிரஸ் வேட்பா ளரான ஜெயலட்சுமியின் வெற்றி உறுதி ஆகி உள்ள தாகத் தொகுதி மக்கள் தெரி விக்கின்றனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image