ஊழல் குற்றச்சாட்டிலிருந்துபா.ஜ.க. தப்ப முடியாது

உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

அரித்துவார், மார்ச்.11  பாஜக இதுவரை செய்த ஊழல் குற்ற சாட்டிலிருந்து தப்ப முடியாது பா.ஜ.க.வினர் 2022 ஆம் ஆண்டு தேர்தலில் நிராகரிக்கப்படு வார்கள்.

மேலும் சட்ட மன்றத்தை முன்னதாகவே கலைத்து விட வேண்டும் என்று உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் முதல்வரை மாற்றுவது  பாஜக, தனது தோல்விகள், தவறான செயல் கள் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகளை மறைக்க மேற் கொள்ளும் ஒரு பயனற்ற முயற்சி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும்  சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் தேர்தல்களை சந்திக்கவும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியில் இருந்து விலகியது மட்டும் போதுமான நடவடிக்கை இல்லை என்றும் கூறி

யுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு நைனிடால் உயர்நீதிமன்றம், முன்னாள் முதல்வருக்கு எதி ரான குற்றச்சாட்டுகள் தொடர் பாக சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தர விற்கு எதிராக உச்ச நீதிமன் றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது.

வேலையின்மை, மாநிலத் தின் வளர்ச்சி, ஊழல் மற்றும் முறைகேடு, வன காவலர்களை நியமிப்பதில் முறைகேடுகள், பின்தங்கிய குழந்தைகளுக்கான மதிய உணவு கிடைப்பதில் சிக்கல் என்று இந்த அரசாங்கம் ஒரு முழுமையான தோல்வியாக இருந்தது.

இந்த விவகாரங்கள் எல்லாம் மக்கள் மனதில் புதிய வையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மாநில பொறுப்பாள ரான தேவேந்திர யாதவ் கூறி யுள்ளார்.

காங்கிரஸ்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாஜக இதுவரை செய்த ஊழல் குற்றச் சாட்டில் இருந்து தப்ப முடியாது மக்கள் எதையும் மறக்கத் தயராக இல்லை நிச்சய மாக 2022 ஆம் ஆண்டு தேர் தலில் பாஜக கப்பல் கவிழ்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

Comments