நூல் அரங்கம்

 நூல் மதிப்புரை

 திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்

ஜெ.ஜெயரஞ்சன்

கயல் கவின் புக்ஸ்

3 , இரண்டாவது பிரதான சாலை திருவள்ளுவர் நகர் கொட்டிவாக்கம் சென்னை 41

மொத்த பக்கங்கள் 352

விலை ரூ.350/-

கிடைக்குமிடம் சிந்தன் புக்ஸ், 327/1, திவான் சாகிப் கார்டன், டிடிகே சாலை, இராயப்பேட்டை, சென்னை-14

தமிழ் மக்களின் வாழ்வில் ஒளி தரும் விடியலாகத் தோன்றியது திராவிட இயக்கம்.

1920இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடங்கிய திராவிட இயக்கத்தின் முன்னோடி கட்சியான நீதிக் கட்சியில் மிகக்குறைந்த அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய சமுதாய பொருளாதார மாற்றங்களுக்கான விதையை ஊன்றியது. கல்வி, சமூக நீதி, பொது இடங்களில், சமத்துவ உரிமை போன்ற அடிப்படையான நடவடிக்கைகள் நீதிக் கட்சியால் தொடங்கப்பட்டன. பின்னர் வந்த ஆட்சிகள் அவற்றை சிதைத்தாலும்,  அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபின் 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிக்கட்சியில் வழியில் திராவிட ஆட்சியை தொடங்கியது. காமராஜர் அவர்களால் கல்விப் புரட்சி தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி கொண்டு சென்றது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. மீண்டும் சமூகநீதி, சமூக சீர்திருத்தம் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் தனது பணியை தொடங்கியது.

இன்று தமிழகம் இந்தியாவில் ஒரு தனித்த மாநிலமாகவே விளங்குகின்றது. கல்வியிலும் சமூக பொருளாதார மேம்பாட்டிலும் மருத்துவ கட்டமைப்பிலும் எடுத்துக்காட்டான மாநிலமாகத் திகழ்கிறது.

திராவிட அரசியலை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு பெற்றுவரும் தொடர் வளர்ச்சியை யும், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளையும், செய்த சாதனைகளையும் மறைத்துதிராவிடத் தால் வீழ்ந்தோம்“ “திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை சீரழித்து விட்டனஎன்று பொய் யான அவதூறுகளை மட்டுமே உள்ளீடாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகின் றனர். அத்தகைய அவதூறுகளை சுட்டெரிக்கும் அனலாக, திராவிட இயக்க செயல் பாட்டாளர் களுக்கு ஆயுதமாக, வருங்கால தலைமுறைக்கு ஆவணமாக பொருளாதார நிபுணர் ஜெ.ஜெய ரஞ்சன் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ள நூல் தான்திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்ஆகும்.

ஜெ.ஜெயரஞ்சன், ஜான் ஹாரிஸ், கே. நாகராஜ், .விஜயபாஸ்கர், .கலையர சன், காயத்திரி பாலகோபால் போன்ற ஆய்வாளர் களின்   கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன..

ஆய்வாளர் ஜெயரஞ்சன் அவர்கள் தமது முன்னுரையிலேயே மிகத் தெளிவாக 50 ஆண்டுகால தமிழகத்தின் அரசியல் சமுதாய பொருளாதார துறை, தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த தகவல்களை சரிவாக வழங்கியுள்ளார்.

தொடர்ந்துகாவிரிப்படுகையில் நிலத் தின் அரசியல் பொருளாதாரம்என்னும் தலைப் பிலான கட்டுரையில் திராவிட இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பொரு ளாதார சமுதாய மாற்றம் குறித்து விரிவாக அலசி அந்த மாற்றங் களுக்கான காரணத்தை கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறார்.

விவசாயிகளுக்கு சாதகமான படிப்படியாக அமலுக்கு வந்த சட்டங்கள்,

குத்தகைதாரர்களும் விவசாயத் தொழிலா ளர்களும் இயக்கங்களும் முன்னெடுத்த போராட்டங்கள், பார்ப்பன எதிர்ப்பு இயக்கத் தின் செயல்பாடுகள்,

கிராம அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய உற்பத்தி முறை விவசாயி களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சமூக நீதியின் பங்களிப்பு ஆகியவற்றை பட்டியலிட்டு விளக்குகிறார்.

சட்டம் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்றை களப்பணியும் சமுதாய மாற்றமும் அதிகாரப் பரவலாக்கல் சாத்தியப்படுகிறது அறிந்து கொள்வதற்கு திராவிட இயக்கத்தின் காட்சியின் செயல்பாடுகள் உணர்த்துவதாக குறிப்பிடுகிறார். தொடர்ந்து ஜான் ஹாரிஸ், ஜெயரஞ்சன், கே நாகராஜ் இணைந்து எழுதிய கிராமங்களில் சாதி அரசியல் தொடர்பான இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் ஏராள மான புள்ளிவிவரங்களை அளிக்கின்றன. .விஜயபாஸ்கர், ஆண்டிரியு விய்ட் ஆகியோர் எழுதியுள்ள  பொருளாதார மாற்றம் சாதி அரசியல், பற்றிய கட்டுரை பல்வேறு சான்றாதாரங்களைக் கொண்ட  ஆய்வுக் கட்டுரையாகும். கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை முன்வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வில் கொங்கு பகுதி மக்களின் வேளாண்மை, தொழில் துறை, அரசியல் சமூக சூழல் ஆகியவை குறித்து ஏராளமான தகவல்கள் வெளிப்படுகின்றன.

அடுத்த கட்டுரையானமக்கள் நலத் திட்ட அரசியலுக்கு மத்தியில் விவசாய பிரச் சினை  என்னும் கட்டுரையும் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கிராம பொருளாதாரத்தை அதன் காரணிகளை புள்ளி விவரங்களோடு அளிக்கிறது. தமிழ்நாட்டில் வறுமை வேலை வாய்ப்பு வருமானம் என்னும் கட்டுரையும் தமிழ் நாட்டின் பொருளாதார சமூக நிலையை பிறமாநிலங் களுடன் ஒப்பிட்டு அரிய தகவல்களை வழங்குகிறது.

.கலையரசன் அவர்கள் எழுதியுள்ளமக்கள் நல அரசியலும் கட்சி சமூகமும்கட்டுரை தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் வளர்ச்சி சார்ந்த ஆட்சி முறை குறித்து அறிவு பூர்வமான தகவல்களை வழங்குகிறது.

அவரது மற்றொரு கட்டுரையானதிராவிட நலத்திட்ட அரசியலும் சமூக பாது காப்பும்கட்டுரை வரலாற்று களஞ்சியமாக விளங்குகிறது.  இந்த கட்டுரை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் யேன் டிரேஸ் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துக்களை கொண்டு தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய சமூக கொள்கை உருவாக்கத்தை விளக்குகிறது. சமூக விலை பயன்களை பொருத்த வரையில் பெரும்பாலான சமூக குறியீடுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒப்பீட்டளவில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிவுபூர்வமாக எடுத்துக் காட்டுகிறது.

கல்வி,மருத்துவம், அடிப்படை பொது சுகாதார கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, உணவு மற்றும் நுகர்பொருள் பொது விநியோகத் திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவை குறித்து ஏராளமான தகவல்களை தருகிறது. அரசு பணிக்களிலும், அதிகாரத்திலும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது இத்தகைய வளர்ச்சி பரவலாக்கத்திற்கு காரணம் என்பதை விளக்குகிறது.

இறுதியாக பொது சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சாதித்தவற்றை நீட் தேர்வு முற்றிலு மாக ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும் என்பதை ஆய்வு பூர்வமாக விளக்கு கிறார் அக்கட்டுரையின் ஆசிரியர் .கலையரசன். தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக வளர்ந்திருக்கும் பொது சுகாதார கட்டமைப்புநீட்தேர்வினால் சிதைக்கப்படும் சூழலை தெள்ளத் தெளிவாக விளக்கி  அடுத்த கட்டம் நம் கடமை என்ன என்பதை சொல்லாமல் சொல்கிறது. இந்த நூலை இக்காலகட்டத்தில் வெளிக் கொண்டுவருவது திராவிட இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கு காலத்தால் செய்த உதவி ஆகும்.

இந்நூலின் பதிப்பாசிரியர் எளிய மக்களின் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களுக்கும் கட்டுரைகளை எளிய முறையில் தமிழாக்கம் செய்து உள்ள பிரவீன் ராஜ் அவர்களுக்கும் தமிழ் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

- வை.கலையரசன்

Comments