ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: கூட்டணி கட்சிகளுடன் எள் முனையளவும் சேதம் ஏற்படாமல் மிக நேர்த்தியாக தொகுதி எண்ணிக்கை உடன்பாடு மற்றும் போட்டியிடும் தொகுதிகளை சுமூகமாக பேசி முடித்து திமுக கூட்டணி சிதறாதா என காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளாரே தளபதி மு..ஸ்டாலின் . இது குறித்து தங்களின் கருத்து?

- மன்னை சித்து, மன்னார்குடி - 1.

பதில்: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி சகோதரர் மு..ஸ்டாலின் எவ்வளவு பக்குவமும் அரசியல் முதிர்ச்சியும் பெற்றவர் என்பதற்கு, அவரது இந்த சிந்தாமல், சிதறாமல், சேதாரம் இல்லாமல் அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்த அரிய சாதனை ஓர் எடுத்துக்காட்டு. கடந்த 7 ஆண்டுகளாக போராட்டக்களங்களில் பூத்த மலர்களின் கதம்பவாசனை இதன் மூலம் தெளிவாகிறது.

கேள்வி 2: தன்னைக் கேட்காமல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள் என்று கேரளாவைச் சார்ந்த பழங்குடி இனத்தவரான மணிகண்டன் என்பவர் தெரிவித்து அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது எதை குறிக்கிறது?

- . தமிழ்க்குமரன், ஈரோடு.

பதில்: பா...வின் உண்மை உருவம் எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைக்கிறது.

கேள்வி 3: தமிழக மக்கள் நீட் தேர்வே வேண்டாம் என்று வலியுறுத்துகின்ற நிலையில், தற்போது நர்சிங் படிப்பிற்கும், கலைக்கல்லூரிகளுக்கும்கூட  நீட் தேர்வு கட்டாயம் என்பது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலக் கனவு கேள்விக்குறி ஆகிவிடும் அல்லவா?

            - சு.மோகன்ராஜ், தாம்பரம்

பதில்: அதிலென்ன சந்தேகம்; இத்தேர்வுகளை தடுக்க ஒரே தீர்வு. ஏப்ரல் 6ஆம் தேதி உதயசூரியன் கூட்டணிக்கு வாக்களித்து பா... - அதிமுக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்யும் தடுப்பூசியே!

 கேள்வி 4: ஜாதி மற்றும் ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடி வரும் கவுசல்யா சங்கர் அவர்களை International Women  Of  Courage Award - 2021 விருதுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் பரிந்துரை செய்துள்ளது பாராட்டுக்குரியது தானே!

               - சீதாலட்சுமி, திண்டிவனம்

பதில்: நிச்சயம் பாராட்டுக்குரியது தான்!

கேள்வி 5: மக்கள் அலட்சியத்தால் தான் கரோனா பரவுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை  அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களின் குற்றச்சாட்டு சரியா?

                 - கலைவாணி, மேடவாக்கம்.

பதில்: மத்திய அரசு தனது முயற்சிகள் தோல்வி என்பதை அப்பட்டமாக ஒப்புக் கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலம்

கேள்வி 6: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) குறித்து அதிமுகவுக்கும் குழப்பம் உள்ளதாக பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளாரே- இது பற்றி தங்கள் கருத்து.?

                - எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: குழப்பம் இப்போது குடிஉரிமைச் சட்டம் பற்றியல்ல; பா... - அதிமுக கூட்டணி என்ற கபட வேடதாரிகளிடம் தான் வேஷம் கலைகிறதோ!

கேள்வி 7: முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழக வேட்பாளர்களே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நல்ல நாள்,நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் பார்ப்பது பாமர மக்களிடையே மேலும் மூடநம்பிக்கையை வளர்ப்பது ஆகாதா?

                 - மல்லிகா, மாங்காடு

பதில்: நமது மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத் தேவை களத்தின் நீள, அகலம் எவ்வளவு என்பதற்கான செய்தி இது!

கேள்வி 8: கேஸ், பெட்ரோல், டீசல் விலையேற்றங்களை மிஞ்சும் அளவிற்கு 10 ரூபாயாக இருந்த பிளாட்பாரம் டிக்கெட்டை 50 ரூபாய் உயர்த்தியிருக்கிறதே பிஜேபி அரசின் இரயில்வே அமைச்சகம்?

                  - செந்தமிழ் காவலன், திண்டிவனம்.

பதில்: பா... ஆட்சியின்வளர்ச்சிவிகாஸ் இதில்தான்! வாக்காளர்களுக்குப் புரிய வையுங்கள்!

கேள்வி 9: வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடம் கூட வெற்றிபெறவில்லை என்று செய்தி வர வேண்டும் அதற்குப் பெரியார் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் ?

               - .தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: மற்ற பணிகளை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, விழிப்புணர்வை அனைத்து தரப்பிலும் ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி 10: பாதாளச் சாக்கடையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மரணம் அடையும்போது அதிகாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளாரே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: நியாயமான கேள்வி மட்டுமல்ல, தாமதமில்லாமல் விடையும் காணவேண்டும்.

Comments