மத்திய பாஜக ஆட்சியில் அராஜகம்மதரசாக்களில் ராமாயணம், மகாபாரத பாடங்களாம்

.பி. மவுலானாக்கள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி, மார்ச் 10- புதிய கல்விக் கொள்கையின்படி தேசிய திறந்தவெளிக் கல்வி நிறுவனம் (என்அய்ஓஎஸ்) புதியபாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மத்திய கல்வித் துறையின் கீழ் தன் னாட்சி நிறுவனமாக இது செயல்படுகிறது.

இதன் பாடத்திட்டங்கள், என்அய்ஓஎஸ் சார்பில் அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிலையங் களுக்கு மட்டும் பொருந்தும்.

இதன்கீழ் நாடு முழுவ திலும் செயல்படும் ஒரு பகுதி குருகுலங்களுடன் சேர்த்து இஸ்லாமியர்களின் 100 மத ரசாக்களும் இடம்பெற்றுள் ளன. இந்த மதரசாக்களில் சுமார் 50,000 முஸ்லிம் மாண வர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்நிலையில், புதிய கல் விக் கொள்கையின்படி பண் டைக்கால வரலாறாக அய்ந்து வகைப்பாடப்பிரிவுகளை என்அய்ஓஎஸ் அறிமுகப் படுத்தி உள்ளது. இதில், வேதங்கள், விஜானா, யோகா, சம்ஸ்கிருதம், தொழிற்கல்வி ஆகியவை உள்ளன. வேதங் கள் பிரிவில் இராமாயணம், மகாபாரதப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து லக்னோ ஈத்கா மசூதியின் இமாமும் தாரூல் உலூம் பிரங்கி மஹா லின் தலைவருமான மவுலானா காலீத் ரஷீத் கூறும்போது, “தனியாராலும் .பி. அரசின் நிதி உதவியாலும் இரண்டு வகை மதரசாக்கள் உள்ளன. இதில் தன்னிடம் அங்கீகாரம் பெற்ற மதரசாக்களின் பாடத் திட்டங்களை வகுக்கும் உரிமை என்அய்ஓஎஸ்-க்கு இல்லை. தனியார் மதரசாக் களில் தலையிடும் உரிமையும் அதற்கு கிடையாது என்ப தால் அதன் புதிய பாடத் திட்டங்களை மதரசாக்கள் ஏற்கக் கூடாதுஎன்றார்.

இவர், அகில இந்திய முஸ் லிம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

லக்னோவின் மற்றொரு முக்கிய மவுலானாவும் மத ரசா சுல்தான் அல்-மதராசின் நிர்வாகக்குழு உறுப்பினரு மான யாகூப் அப்பாஸ் கூறும்போது, “மதரசாக்களில் ராமாயணம், மகாபாரதப் பாடங்களை அறிமுகப்படுத் தும் அரசு, குருகுலங்களில் புனிதக்குர்ஆனை போதிக்க உத்தரவிடுமா? இதுபோல், இஸ்லாமியக் கல்வி நிலையங் களிலும் தலையிடுவார்கள் எனில் அதை முஸ்லிம் சமு தாயம் கடுமையாக எதிர்க்கும்என்றார்.

Comments