நெல்லை மண்டல செயலாளர் அய்.இராமச்சந்திரன் - சு.உமா‌ இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

கழகத் தலைவர் தலைமையேற்று காணொலி வாயிலாக நடத்தி வைத்து வாழ்த்துரை

நெல்லை, மார்ச் 14- நெல்லை மண்டல செயலாளர் அய்.இராமச்சந்திரன் - சு.உமா ஆகி யோரது இல்ல வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகத் தலைவர் தலைமையேற்று காணொலி வாயி லாக நடத்தி வைத்து உரையாற்றினார்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அய்.இராமச் சந்திரன் - சு.உமா ஆகியோரின் மகன் மருத்துவர் .இரா.மானவீரன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி .சந்திரசேகரன் - .ராணி எழிற்செல்வி ஆகியோரின் மகள் மருத்துவர் .சண்முகப்பிரியா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் 17-1-2021 அன்று காலை காணொலி வாயிலாக நடத்தி வைத்தார்.

மணவிழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் அய்.இராமச்சந்திரன் வரவேற்று உரையாற்றினார்.

தென் மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர்

சீ. டேவிட் செல்லத்துரை தொடக்கவுரையாற்றினார்.

கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி,  திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், முன்னாள் கடையநல்லூர் நகராட்சி மன்ற தலைவர் செ..ஷாஜகான், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.அறிவழகன்,  செல்வராஜ்,  இராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மண்டலத் தலைவர் ஆசிரியர் சு.காசி ராஜன், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, மாவட்டச் செயலாளர் .இராசேந்திரன், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் .வீரன், மாவட்டச் செயலாளர் வே.முருகன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்,  திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் யாழ்.திலீபன் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த தோழர்களும், கழகப் பொறுப்பாளர்களும் வாழ்த்து களை வழங்கினார்கள். நெல்லை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் ..சவுந்தர பாண்டியன் இணைப்புரை வழங்கினார்.

இறுதியாக மணமக்கள்  நன்றி கூறினர்.

மணமக்கள் மணவிழாவை முன்னிட்டும், மணமகள் .சண்முகப்பிரியாவுக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி & மருத்துவமனையில் முதுகலை மருத்துவ இடம் (எம்.டி) கிடைத்ததை முன்னிட்டும் 24.01.2021 அன்று கழகத் தலைவரை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கழகத் தலைவர் மணமக்களுக்கு இயக்க நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

 

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image