அ.தி.மு.க.வின் நீதிமன்ற அவமதிப்பு

 "அனைத்துத் தமிழர்களும் வெட்கித் தலை குனியும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக நிலம், நீர் மட்டுமல்லாமல் காற்றிலும் (2ஜி அலைக்கற்றை) ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டது.

-இது ...தி.மு..வின் தேர்தல் அறிக்கையில் (பக்கம் 15) குறிப்பிட்டுள்ளதே?

இது சட்டப்படி நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் அல்லவா! இதில் .இராசா குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொன்ன பிறகு - ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய .தி.மு..வின் அதிகாரப்பூர்வமான ஒரு தேர்தல் அறிக்கையில் அபாண்டமாக பழி சுமத்தலாமா?

இதுதான் ...தி.மு.. என்றால் அதன் நம்பகத் தன்மையும், ஆரோக்கியமான பண்பாடும் இவ்வளவுக் கீழிறக்கமாகி விட்டதே என்று விவரம் தெரிவித்தவர்கள் கருதமாட்டார்களா?

இன்னொரு கேள்வி இருக்கிறது. ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று தீர்ப்புச் சொல்லப்பட்டவர், ஊழல் செய்ததற்காகச் சிறையில் இருந்தவரின் "அம்மா ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்று சொல்லுவது பிரமாண்டமான நகைச்சுவையல்லவா!

கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாமா?

வாக்காளர்களே! நெஞ்சறிந்து பொய் சொல்வோரைத்

தண்டியுங்கள்! தண்டியுங்கள்!!

Comments