ஆசிரியருக்குக் கடிதம் - பாசத்தோடு வாழுங்கள்!

24.1.2021 அன்று முனைவர் அதிரடி .அன்பழகன் மகள் ..இளமதி - மணமகன் இரா.வீரமணி திரு மண நிகழ்வில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங் கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையை 4.3.2021 ‘விடுதலை'யில் படித்தேன். மிகவும் நெகிழ்ச்சி யாகவும் - உணர்வு பூர்வமாகவும் இருந்தது.

மணமக்களுக்கு ஆசிரியர் வழங்கிய அறிவுரையில்,

1) முதலாவதாக வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு தான் உயர்ந்தாலும். எவ்வளவுதான் வளம் மிக்கவர் களாக ஆனாலும் சரி அளவறிந்து வாழுங்கள்.

2) பாசத்தோடு வாழுங்கள் - அதுதான் மிக முக்கியமானது.

3) பெற்றோருடைய தியாகம் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதுபோல் நீங்களாக உயர்வீர்கள். அந்தப் பெற்றோர் உங்களிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல - அன்பை, பாசத்தை, மரியாதையை, நட்பை - அதை என்றைக்கும் - மறக்காதீர்கள்.

மேற்கண்ட ஆசிரியரின் அறிவுரை இன்றையக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. இதைப் பிள்ளைகள் பின்பற்றினால் எந்தப் பெற்றோர்களும் கண்கலங்க மாட்டார்கள். பக்தி வழியில் இருக்கும் குடும்பத்தில், இல்லாத கடவுளை தேடிக்கொண்டு இருப்பதைவிட உயிருடன் நேரில் வாழும் தாய், தந்தையை அன்புடன், பாசத்துடன் நேசிப்பவர்கள் தான் மனிதநேயமிக்க மனிதர்களாக கருதப்படு வார்கள் என்பதுதான் உண்மை!

தமிழர் தலைவரைப் போல் உலக அளவில் புகழ் வாய்ந்த தலைவர் - எளிமை + ஒழுக்கம் + நேர்மை = கி.வீரமணி என்பதற்கு இலக்கணமாய் வாழ்கிறார். தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் அவரைப்போல் புடம்போட்ட தங்கத்தை - பார்க்க முடியுமா? பெரியாரின் கொள்கை வாரிசு - தமிழர் தலைவர் தலைமையில்திராவிடம் வெல்லும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- தி..பாலு

பொன்மேனி, மதுரை-10

Comments