தேர்தல் களத்தில்.....

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தளபதி மு..ஸ்டாலின், ராகுல் காந்திஒரே மேடையில் பேசுகின்றனர்

சென்னை, மார்ச் 22- தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. வாகனங் களில் சென்றும், வீதி வீதியாகவும் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார். பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, வாக்கு சேகரித்து வருகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல்  தி.மு.. கூட்டணியில் இடம் பெற்றுள்ள .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தி.மு.. கூட்டணிக்கு வாக்கு சேக ரித்து, பிரச்சாரம் மேற்கொண் டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை மண்டலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் தென் மாவட்டங்களான தென்காசி, கன் னியாகுமரி பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார். அவர் மு.. ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதற்காக 2 நாள் பிரச்சார பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். அதற்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று கூறினார். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. சில கூட்டங்களில் அவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பேச இருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தில் தி.மு.. புகார்

சென்னை, மார்ச் 22- சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகி யோர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பான பெயர் பட்டியலை நேற்று (21.3.2021) அளித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். தொடர்ந்து சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முழுக்க முழுக்க காவல்துறையினரின் ஒத்துழைப்போடு அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக எங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்து இருக்கிறோம். ஒவ் வொரு அதிகாரியும் என்ன செய்துள்ளார் என் பதை விரிவாக சொல்லியிருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.

சென்னை காவல்துறை ஆணையர் உள் ளிட்ட சில அதிகாரிகள் மீது டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்து இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக் கையை சிலர் வேண்டுமென்றே பொய்யாக திரித்து சமூக அமைதியை குலைக்கும் வகை யிலும், மக்கள் மத்தியில் ஜாதிக் கலவரத்தை உருவாக்கும் வகையில் 'யூடிப்பில்' ஒரு அம் மையார் பேசுவது போல காட்சி வந்துள்ளது. அதில் திமுக தேர்தல் அறிக்கையிலே கூறப் பட்ட அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண திட்டம் என்ற தலைப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட திமுகவின் அறிவிப்பை பொய்யாக திரிக்கப் பட்டு அந்த பேச்சு அமைந்துள்ளது. கலப்பு திரு மண திட்டம் என்பது 55 ஆண்டுகளாக இருந்து வருகின்ற ஒரு திட்டம். அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா வரையும், இன்று பழனிச்சாமி வரையும் இந்த திட்டம் இருந்து வருகிறது.

நாங்கள் இப்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறோம், என்னவென்றால் உதவித்தொகை ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.60 ஆயிரமாக உயர்த்திக் கொடுப்போம் என்று தான் சொன்னோம். இதை மக்கள் மத்தியில் திசை திருப்பும் வகையில் 2 பேர் காட்சிப் பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. இன்னொருவர் பேசினார். அவர் பாஜவின்அய்டி.விங்கைசார்ந்தவர் என்று கண்டுபிடித்து கொடுத்து விட்டோம். புகார் கொடுத்து இருக்கி றோம். காவல்துறை ஆணையரிடமும், தேர்தல் ஆணையத்துக்கும் கொடுத்து இருக்கிறோம். உடனடியாக அவ்வாறு பேசிய பெண்மனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ உடன் இருந்தார்.

.தி.மு.. வேட்பாளர்கள் விரட்டியடிப்பு

அமைச்சர்களுக்கும் கடும் எதிர்ப்பு

சென்னை, மார்ச் 22-  தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. துணை முதல்வர் .பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதி முக அமைச்சர்களே மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

10 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாததாலும், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததாலும் மக்களின் கோபம் அதிமுக வேட்பாளர்கள்மீது திரும்பி உள்ளது. பல இடங்களில் தட்டிக்கேட்கும் மக்கள்மீது அதி முகவினர் தாக்குதல் நடத்தியதால் மறியலில் ஈடுபட்டனர்.  அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. பாஜவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு இஸ்லா மியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இதை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. சட்டங்களை அமல்படுத்துவதில உறுதியாக உள்ளது. அதேபோல், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

மேலும்,தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் பணி, இந்தி திணிப்பு முயற்சி, தமிழர் விரோத போக்கு ஆகிய நடவடிக்கை களில் பா.. ஈடுபட்டு வருகிறது. குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்களுக்கு நாடாளுமன் றத்தில் அதிமுக உறுப்பினர்கள் நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர்.

மத்திய அரசின் தயவால் தான், தமிழகத்தில் அதிமுக ஆட்சி 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. இதனால் தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்துவிட்டு, பாஜக அரசு சொல்வ தையெல்லாம் தமிழக அரசு கேட்டதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

மேலும் மதுரை, கோவை மாவட்டத்திலும் சில அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி தமிழகம் முழுவதும் மக்களிடம் கிளம்பி உள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அதிமுக வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். இன்னும் 14 நாட்கள் பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது. மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை எப்படி சமாளிப்பது என்று அதிமுக வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்து விட்டு, பாஜக அரசு சொல்வதையெல்லாம் தமிழக அரசு கேட்டதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

செங்கம், செய்யாறில்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

செங்கம், மார்ச் 22- சென்னை-சேலம் வரை அமையும் 8 வழிச்சாலை திட்டத்தால் திரு வண்ணாமலை உட்பட 5 மாவட்ட விவசாயி கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், இத்திட்டத்தை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கண்டனம் தெரிவித்தும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனி சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதி முக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (21.3.2021) தேர்தல் பிரசாரம் செய்தார். அதன்படி, செங்கம் சட்டமன்ற தொகு தியில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணுவை ஆதரித்து, பிரசாரம் செய்ய முதல்வர் நேற்று மாலை செங்கம் நகருக்கு வந்தார்.

அப்போது, முதல்வர் வரும் வழியான, புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள மண்மலை கிராமத்தில் சாலையின் இருபுறமும் திரண்ட விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முதல்வரின் பாதுகாப்புக்காக வந்த காவல் துறையினரின் வாகனங்கள், மண்மலை கிரா மத்தை நெருங்கியதும், அங்கிருந்த விவசாயி கள் கலைந்து சென்றுவிட்டனர். இதேபோல், செய்யாறு அடுத்த எருமைவெட்டி கிராமத்தி லும் தமிழக முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள விளைநிலத்தில் கருப் புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் இப்பகுதி களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments