ஊரார் போற்றும் நீடாமங்கலம் சிவஞானம்

இவருக்கு வயது இப்பொழுது 92 (9.8.1929). பெற்றோர் பழனிவேல் - லோகம்மாள். பிறந்த ஊர் வடுவூர். வாழ்விணையர் செல்லகண்ணு, மகன்கள் இருவர், மகள்கள் மூவர்.

கல்வி: மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அக்ரி பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டதாரியானார். வேலூரில் விவசாயத்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.

நீடாமங்கலத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நண்பர்கள் மூலம் பெரியார் கொள்கைகள் பற்றி அறியலானார். குறிப்பாக நீடாமங்கலத்தில் மானமிகு ஆ.சுப்பரமணியம் அவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர் ஆனபடியால் தந்தை பெரியார் பற்றியும், இயக்கம் பற்றியும் பெரும் அளவுக்கு அறிந்து கொள்கையில் அய்க்கியமானார்.

தொடக்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் பணியாற்றினார். பிறகு நேரடியாகவே திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, இப்பொழுது பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

நீடாமங்கலத்தில் கீற்றுக் கொட்டகையாக இருந்த பெரியார் படிப்பக இடத்தில், இப்பொழுது மூன்று மாடிக்கட்டடம் எழுந்து நிற்கிறது. கீழ்தளத்தில் பெரியார் நூலகம் - படிப்பகம் - நூல்கள் விற்பனையகமும் - மேலே உள்ள கட்டடத்தில் அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

இவர் பொறுப்பேற்ற நிலையில் கட்டடப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு, இவர் பொறுப்பிலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஊரார் மத்தியில் மதிப்பிற்குரிய மாமனிதராக விளங்குகிறார். “மூத்தகுடி பெருமக்கள் விருதுவழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.

ஓய்வுக்குப் பின் திராவிடர் கழகம் நடத்தும் போராட்டங்களில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தவறுவதில்லை.

நாள்தோறும் பெரியார் படிப்பகத்தின் இயக்கத்திற்கும் செயல்பாட்டுக்கும் முக்கிய காரணியாக, இருந்து வருகிறார். சிறந்த பண்பாளர் - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நீடாமங்கலத்தில் மதிப்புறு மாமனிதராக ஒளிவீசிக் கொண்டுள்ளார்.

பேட்டி கண்டபோது உடனிருந்த தோழர்கள் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.சி.எஸ்.சித்தார்த்தன், மன்னை மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மன்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் இரா.சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மன்னை .. தலைவர் கோவி.அழகிரி, கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், உரத்தநாடு .உத்திராபதி, நகர இளைஞரணி செயலாளர் சா.அய்யப்பன், மேலவாசல் அமைப்பாளர் இளங்கோவன். பேட்டிகண்டவர்:கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

நாள்: 8.2.2021

Comments