பெலகாவி மாநகராட்சி அலுவலகம் முன் ஏற்றப்பட்டுள்ள கன்னடக் கொடியை அகற்ற சிவசேனா காலக்கெடு

பெலகாவி, மார்ச் 18- வட கருநாடகத்தில் உள்ளது பெல காவி மாவட்டம். இந்த பெல காவி கருநாடகம் -- மராட்டிய எல்லையில் அமைந்து உள் ளது. பெலகாவி மாவட்டத்தில் ஏராளமான மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். இதனால் பெலகாவி தங்களுக்கு உரியது என்று மராட்டிய அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் பெலகாவி கருநாடகத்தின் ஒருங் கிணைந்த பகுதி என்றும், எக் காரணத்தை கொண்டும் பெல காவியை விட்டுத் தர மாட்டோம் என்றும் கருநாடகம் கூறி வரு கிறது. இந்த பிரச்சினை தொடர் பாக கருநாடகம்- மராட்டியம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது.

பெலகாவி பிரச்சினையில் மராட்டிய அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், அதற்கு கருநாடக அரசியல் கட்சி தலைவர்கள் பதிலடி கொடுப் பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெல காவியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு கன்னட அமைப்பினர் இரவோடு, இரவாக கன்னடக் கொடியை ஏற்றினர். இதற்கு பெலகாவியில் வசித்து வரும் மராட்டியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கன்னடர்கள், மராட்டி யர்கள் இடையே மோதலும் ஏற் பட்டது.

மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை

மேலும் பெலகாவி மாநக ராட்சி அலுவலகம் முன்பு ஏற்றப் பட்டு உள்ள கன்னடக் கொடியை அகற்ற வேண்டும் என்று மராட் டியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கொடியை அகற்றும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பெலகாவியில் வசிக்கும் கன்ன டர்களும், கன்னட அமைப்பினரும் கூறி வருகிறார்கள். இதனால் இந்த பிரச்சினை மிகப் பெரியதாக உருவெடுத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் வசித்து வரும் கன்னடர்களின் கடை களில் கன்னடத்தில் எழுதப்பட்டு இருந்த எழுத்துகளை, சிவசேனா கட்சியினர் கருப்பு மை பூசி அழித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் போராடிய கன் னட அமைப்பினர், பெயர் பல கையில் எழுதி இருந்த மராத்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர். இதன் எதிரொலி யாக பெலகாவியில் இருந்து கோலாப்பூருக்கு சென்ற கருநாடக அரசு பேருந்துகள் மீது சிவசேனா கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெலகாவி-கோலாப் பூர் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏற்கெனவே கரோனா காரணமாக போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை நிறுத்தி உள்ளதன் மூலம் கரு நாடக அரசு போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து நேற்று முதல் பெலகாவி-கோலாப்பூர் இடையே மீண்டும் பேருந்துபோக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பெலகாவி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றப்பட்டு உள்ள கன்னடக் கொடியை அகற்ற, சிவசேனா கட்சி யினர் காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர்.

அதாவது வரு கிற 20ஆம் தேதிக்குள் கன்னடக் கொடியை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கோலாப்பூரில் கடைகள் நடத்தி வரும் கன்ன டர்களை அங்கு தொடர்ந்து கடைகளை நடத்த விட மாட்டோம் என்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் கோலாப் பூரில் கடைகள் வைத்து உள்ள கன்னடர்கள், இந்த பிரச் சினையில் கருநாடக அரசு தலை யிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Comments