நிலவின் மேற்பரப்பில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் சீனா - ரஷ்யா கூட்டாக அறிவிப்பு

மாஸ்கோ, மார்ச் 12, நிலவின் மேற்பரப்பில் சீனா - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் அமைக்கப் பட உள்ளது.

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டி லும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை உரு வாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இரண்டு நாடு களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆராய்ச்சி கட்டமைப்பை மற்ற நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியதன் 60ஆவது ஆண்டை விரைவில் கொண்டாட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.

இதுதொடர்பாக சீன, ரஷ்ய விண்வெளி அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி இன்டர் நேஷனல் சயின்டிபிக் லூனார் ஸ்டேஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு மய்யத்தில், சந்திரன் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளும், அதன் பயன்பாடு குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்ற உலக நாடுகளை ஒப்பிடு கையில் சீனா விண்வெளி ஆய்வுத் துறையில் தாமதமாகவே முன்னேற தொடங்கியது.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலவிலிருந்து வெற்றி கரமாக பாறை மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு வந்து சாதனைப் படைத்திருந்தது. இது விண்வெளித் துறையில் சீனாவின் அதிவேக வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப் பட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கிய ரஷ்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சீனாவும் அமெரிக் காவும் கடும் சவால்களை அளிக்க தொடங்கியுள்ளன.

பன்னாட்டு விண்வெளி நிலையத் திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வதில் முன்னணியில் இருந்து வந்த ரஷ்யா, கடந்த ஆண்டு அந்த இடத்தை அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Comments