நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 15, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்...

கடந்த ஆண்டில் நம் ஆரோக்கியத் திற்கு எவ்வாறு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த மாற்றத்தினால் அவர்கள் பாரம்பரியம் மற்றும் ஆரோக் கியமான உணவினை நாடி செல்ல ஆரம் பித்துவிட்டனர். ஆரோக்கிய வாழ்விற்கு உறுதி செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று, தாகத்தைத் தணிப்பது மட்டுமல் லாமல், அவற்றின் ஆரோக்கிய நன்மை களுக்காக அறியப்பட்ட மிகவும் பழைமை யான பாரம்பரிய பானங்களைப் பருகு வதும்தான். அதில் எந்தவித ரசாயனம் மற்றும் கலப்படம் இல்லாத இயற்கை நமக்கு அளித்து இருக்கும் பானம் என்றால் அது இளநீர். இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

* கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உடல் சூட்டினை தணிப்பதற்கும் இளநீர் ஒரு சிறந்த பானம்.

* கடினமான, வியர்வை  மிகுந்த உடற்பயிற்சிக்குப் பிறகு நம் உடலை மறுசீரமைக்க இளநீர் மிகவும் உதவுகிறது.

* எந்த வித செயற்கை சர்க்கரையும் கலக்கப்படாத இயற்கைப் பானம் என்ப தால் அனைவரும் இதனை அருந்தலாம்.

* இது கலோரிகளில் மிகவும் குறைவு.

* நிறமியைக் குறைக்கவும், முகப்பரு, மந்தமான மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது.

* மது அருந்துவதால் அது உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்தி விட்டு சரியான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது தான் அது உடலுக்கு பல தீமையினை ஏற்படுத்துகிறது. மது அருந்துபவர்கள் மறுநாள் இளநீர் பருகி னால் உடலில் உள்ள நீர்ச்சத்தினை தக்க வைத்து இழந்த சக்தியியையும் மீட்டுத் தருகிறது.

* இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பாதுகாக்க உதவும்.

No comments:

Post a Comment