பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் - உலக மகளிர் தின விழா

திருச்சி, மார்ச் 12 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் தினவிழா திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் 10.03.2021 அன்று மாலை 2.30 மணியளவில் கல்லூரி அரங்கத் தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் மாணவர் கழக முதுநிலை மருந்தியல் மாணவர் மா. சிவகணேஷ் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது தலைமையுரையில்,  பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்ணுரிமைக்காக பாடுபட்ட  ஒப்பற்ற தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் என்றும் அத்தகைய சிறப்பிற்குரிய அய்யா அவர்களை 95 வயது வரை கட்டிக் காத்த பெருமைக்குரியவர் அன்னை மணியம்மையார் என்றும் உரையாற்றினார்.

மேலும் பெண்ணுரிமை குறித்து தாம் சிந்தித்தவற்றிற்கு செயல்வடிவம் அளிக்கக்கூடிய வகையில் அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களை முன்னிலைபப்டுத்தியதோடு தம் மறைவிற்குப்பிறகு  இயக்கத்தை வழிநடத்த அன்னை மணியம்மை யாரை அடையாளப் படுத்தினார்கள். உலக அளவில் ஒரு நாத்திக அமைப் பிற்கு தலைமையேற்ற முதல் பெண் அன்னை மணியம் மையார் என்ற பெருமையினையும் நமது அம்மா அவர்கள் பெற்றிருக் கின்றார்கள். 

இன்று திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் அன்னையார் அவர்களின் பிறந்த நாளினை உலக மகளிர் தின விழாவாக கொண் டாடுகிறோம் இவ்வேளையில் இளைய சமுதாயமான மாணவச் செல்வங்கள் குறிப்பாக பெண்கள் அம்மா அவர்களின் தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல், எதையும் எதிர்த்து போராடும் போர்க்குணம்  ஆகியவற்றை பின்பற்றி நடப்பதோடு தமிழர் தலைவர் நமது நிறுவனத் தலைவர் கூறுவது போல நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நம் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று உரையாற்றினார்.

துணிச்சல் - ஆற்றல் கொண்டவர்கள்

கல்லூரியின் பேராசிரியர் முனைவர் .மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, பெரியார் மன்ற செயலர் பேராசிரியர் ... முகமது ஷபீஃக் மற்றும் இணைச் செயலர்  . ஷமீம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் மருந்தியல் பட்டயப் படிப்பு மாணவர் ரா. வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையில்,

பெண்களை இறகு போன்றவள், மென்மையானவள் என்று போற்றுவ தெல்லாம் பிற்போக்குத்தனம் என் றும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக துணிச்சல் மற்றும் ஆற்றல் கொண்டவர்கள். அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்தான் அன்னை மணியம்மையார் என்றும் உரையாற்றினார். இளநிலை மருந் தியல் மாணவர் .பர்வேஷ் பெண் களுக்கு எதிலும் முடிவெடுக்கக்கூடிய வாய்ப்பினையும் பொறுப்பினையும் அளிக்க வேண்டும் என்றும் அவர் களை பாராட்ட ஆணினம் தயக்கம் கொள்ளக்கூடாது என்றும் உரை யாற்றினார்.

புரட்சிப் பெண்ணே எழுக!

முதுநிலை மருந்தியல் மாணவர் மா.சிவகணேஷ்,  பெண்ணினம் அடைந்த சாதனைகளையும் பெண் ணின முன்னேற்றங்களையும் இக் காலத்தலைமுறைகளுக்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக எடுத்து ரைத்தார்.

மேலும் பெண்கள் முன்னேற்றம் குறித்து பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசினால் எப்படியிருக்கும் என்பத னையும் மிகவும் நகைச்சுவையுணர் வோடு எடுத்துக்கூறினார்.

அவரைத் தொடர்ந்து சோதனைக் கூட ஆய்வாளர் துறை மாணவி புரட்சிப் பெண்ணே எழுக! என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். இந் நிகழ்ச்சியில் கல்லூரியின் பணித் தோழர்கள், சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந் தொண்டர்கள், நாகம்மையார் குழந் தைகள் இல்லம் மற்றும் பெரியார் பெண்கள் விடுதி பணியாளர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  நிறைவாக திராவிடர் மாணவர் கழக இளநிலை மருந்தியல் மாணவி பா. ஜில்லஸ் ரெமிலா நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. முன்னதாக பெண்ணியச் சிந்தனைகளை வலியு றுத்தும் வகையில்  நடனம் மற்றும் மொழியில்லா நாடகம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியினை திராவிடர் மாணவர் கழகம் சிறப்பாக ஒருங் கிணைத்து நடத்தியது குறிப் பிடத்தக்கது.

Comments